* மாவட்டம் : திருநெல்வேலி
* இடம் : தென்காசி
முகவரி :
தென்காசி, திருநெல்வேலி. குற்றாலத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் இந்த சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துள்ளது.
தாலுகா: தென்காசி
வரலாறு :
இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் சுற்றுச்சூழல் பூங்கா, திருநெல்வேலி மாவட்டம் அருவி நகரமான குற்றாலத்தில் ஐந்தருவியின் அருகே தமிழக அரசால் அமைக்கப்பட்ட பூங்காவாகும்.
37 ஏக்கர் பரப்பளவில் பசுமைப் படர்ந்த இடங்கள், நீரூற்றுகள், சிற்பங்கள், புல்தரைகள், மலைப்பாதைகள், சிறுவர் பூங்கா, வண்ணத்துப்பூச்சி பூங்கா, நறுமண தோட்டம், காட்டுப் பூக்கள் பூத்துக்குலுங்கும் மலர் வனம், சாகச விளையாட்டுத்திடல், பசுமைக்குடில், பார்வையாளர்கள் மாடம் போன்ற 22 வகையான சிறப்பம்சங்களை உள்ளடக்கியது இந்த சுற்றுச்சூழல் பூங்கா.
இப்பூங்காவில் எங்கு நோக்கினாலும் பூத்துக்குலுங்கும் பூக்கள், மரங்கள், செடி, கொடிகள் என்று கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை அழகு ததும்பும் மலைக்காட்சிகளும், இதமான சூழலும் நம் மனத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
நடைப்பாதையில் சலசலக்கும் நீரூற்றுகளின் ஓசையைக் கேட்டுக்கொண்டே நடப்பது மனதை இதமாக்குகிறது.
வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணச்சிறகை விரித்து அசைந்தாடும் பட்டாம்பூச்சிகள் உள்ளத்தை வசியப்படுத்துகிறது.
பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மேற்கு நோக்கி பார்த்தால் மேற்குத்தொடர்ச்சி மலையின் பேரழகும், கிழக்கே குற்றாலத்தை சுற்றியுள்ள பசுமையான கிராமங்களும், வயல்வெளிகளும் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
பூங்காவின் சிறப்பம்சங்கள் :
* பச்சைப்பசேலென புல்தரைகள்...
* சலசலக்கும் நீரூற்றுகள்...
* நடைப்பாதைகள்...
* வண்ணச்சிறகை விரித்து அசைந்தாடும் பட்டாம்பூச்சிகள்...
* காட்டுப் பூக்கள் பூத்துக்குலுங்கும் மலர் வனம்...
* பேரழகு ததும்பும் மலைக்காட்சிகள்...
* இதமான சூழல்...
* சாகச விளையாட்டுத்திடல்...
* பார்வையாளர்கள் மாடம்...
மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கும் சொக்கவைக்கும் அம்சங்களை ரசித்து விட்டு, இயற்கையின் பேரழகை தரிசித்து மகிழ ஏற்ற இடமாக திகழ்கிறது இந்த சுற்றுச்சூழல் பூங்கா...
கருத்துகள் இல்லை