* மாவட்டம் : திருப்பூர்
* இடம் : காங்கேயம்
* முகவரி : சிவன்மலை, காங்கேயம், திருப்பூர்
* தாலுகா : சிவன்மலை
வரலாறு :
கொங்கு நாட்டில், குன்றுகளின் மேல் அமைந்துள்ள கோயில்களில் சிறப்பு பெற்றது சிவன்லை. அருணகிரி நாதரால் பாடல் பெற்றது; புராணங்கள், தமிழ் இலக்கியங்கள், சிவமலை குறவஞ்சி என பழங்கால இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. கொங்கு நாட்டின் உறுப்பு நாடுகள் 24ல், காங்கேயநாட்டின் தலைநகராக இருந்தது சிவன்மலை. கங்கையின் புதல்வர் முருகன், காங்கேயன் என்ற சிறப்பு பெற்றதாகவும், கங்கை குல வேளிருக்கு உரியதால் இப்பெயர் பெற்றது, கங்கர்கள் ஆண்டது என பல்வேறு வரலாறுகள் உள்ளது. காங்கேய நாடு கோயில்கள் நிறைந்த நாடு; இன்றும் பல ஆயிரம் ஆண்டு பழைமையான கோயில்கள் காங்கேயம் பகுதிகளில் காணப்படுகின்றன. சிவன் மலை குன்றாகவும், வனமாகவும் இருந்துள்ளது. பட்டாலியே குடியிருப்பாக இருந்துள்ளது. சிவமலை முருகனை பட்டாலியூரன், பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் பாலன் என குறிக்கப்படுகிறது. அடிவாரத்திலுள்ள பட்டாலி வெண்ணீஸ்வரர் கோயில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகவும், ஏழு ஸ்வரங்கள் இசைக்கும் தூண், அற்புதமான சிற்பங்கள், 13 கல்வெட்டுகள் காணப்படுகிறது.
சிவமலை குறவஞ்சியில் சிவன் மலை என பெயர் வந்ததற்கு, வள்ளி நாயகியை முருகன் கவந்து வந்த காரணத்தில், ஏற்பட்ட போரில் இறந்த வேடர்கள், முருகன்- வள்ளி திருமணத்திற்கு பிறகு உயிர் பெற்று எழுந்து , மகிழ்ச்சி கூத்தாடி, பேரொலி எழுப்பியதால் பட்டாலி என பெயர் பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 10-13ம் நுõற்றாண்டில், மிகப்பெரிய வணிக நகரமாக இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. பட்டாலி கல்வெட்டுக்களை 1920ம் ஆண்டே, மத்திய அரசு ஆய்வு செய்துள்ளது. 18 சித்தர்களின் சிறப்பு பெற்றவரும், சிவ வாக்கியம் என்ற நுõலை இயற்சிய சிவஞானியும், சித்தருமாகிய சிவவாக்கியர் அமைத்த கோயில் ஆகும். சிவ வாக்கியர், முருகனின் உபதேசத்தால், இக்கோயிலை அமைத்ததால், சிவமலை என பெயர் பெற்று, நாளடைவில், சிவன் மலை என பெயர் மருவியுள்ளது. பார்வதியின் பாதங்களில் உள்ள அணி கலன்களிலிருந்து தெறிந்து விழுந்த நவரத்தினங்கள் நவகன்னியராகி, அவர்கள் வயிற்றிலிருந்து முருகனின் போர்ப்படை தளபதிகளாக திகழ்ந்த நவ வீரர்கள் தோன்றினர். இதனால், வீரமாபுரம் எனவும் பெயர் பெற்றதாக குறிப்புகள் உள்ளன.சிவமலை. சிவாசலம், சிவராத்திரி, சிவசயிலம், சிவமாமலை. சிவசைலம், சிவநாகம்,சிவகிரி எனவும், புலவர்கள் தெளி தமிழ்தேர் சிவமலை, செல்வ சிவமலை, கல்யாண சிவமலை, மகிமை சேர் சிவமலை, தவசு புரி சிவமலை என பலர் பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. திரிபுர சம்ஹாரத்தின் போது, சிவபெருமான் வாசுகியைக்கணையாக வைத்து, மேருமலையை வில்லாக வளைத்த போது, மேரு மலையில் சிகரங்களில் ஒன்று காங்கேகய நாட்டில் விழுந்தது சிவமலை குன்று. கொங்கு நாட்டின் 24 நாடுகளின் தலைமையானதாக காங்கேய நாடும், அதன் தலைநகராக பட்டாலியூர் சிவன்மலை இருந்துள்ளது. வீதிகள் தோறும் தேர்கள், அன்னதானத்தில் சிறந்த நாடு; கலை வளரும் நாடு; சிவன் மலையில் சீருடன் தேரோட்டும் நாடு, செல்வம் சிறக்கும் நாடு என பழங்கால இலக்கிய பாடல்களில் குறிப்புள்ளது.முத்துரத்தினம் விளையவுள்ள நாடு என்றும் பழங்கால பாடல் குறிப்பிடப்படுகிறது. அதே போல், இங்கு, அரிய வகை கற்கள், நவ ரத்தின கற்கள் எடுக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பழங்காலத்தில், இங்கிருந்து நவ மணிகள் உற்பத்தி; மணிகளாக செய்யப்பட்டு, பெரு வழியில் சென்று, கப்பல்கள் மூலம் ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தது, கொடுமணல் ஆய்வு மூலம் தெரிந்துள்ளது. சங்க இலக்கியமான பதிற்று பத்தில் பாடல் இடம் பெற்றுள்ளது. அருணகிரி நாதர் பட்டாலிக்கு வந்து மூன்று திருப்புகழ் பாடியுள்ளார். பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோயிலில் 17 கல்வெட்டுக்கள் உள்ளன. குலோத்துங்க சோழன், விக்கிர சோழன், வீரராஜேந்திர சோழன், அபிமான சோழ ராஜ ராஜ சோழன் உள்ளிட்டோர் கல்வெட்டுக்கள் உள்ளன.சோழ அரசர்கள் கோவிலுக்கு அதிகளவு கொடை அளித்துள்ளனர். சிலைகள், மண்டபங்கள், விளக்கு வைக்க, சிவராத்திரி கொடை, கிணறு, தோட்டம் என பல குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை