* மாவட்டம் : திருப்பூர்
* இடம் : கொடுவாய்
* முகவரி : கொடுவாய், திருப்பூர்
* தாலுகா : கொடுவாய்
வரலாறு :
சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். முன்புறம் மயில் வாகனம் உள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் முல்லை, அரளி, நந்தியாவட்டை மலர்கள் நிறைந்த தோட்டம் பசுமை விரித்திருக்கிறது. சிறிய செயற்கைக் குளத்தின் நடுவில் லட்சுமியும் சரஸ்வதியும் அமர்ந்த நிலையில் சுதைவடிவாக உள்ளனர். ஏறக்குறைய ஏழடி உயரத்திற்கு பரந்து விரிந்து ஒரு புற்று உள்ளது. திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டால், உடனடியாகத் திருமணம் நடைபெறும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இது ராகு, கேது பரிகார தலமாகவும் விளங்குகிறது.
சுமார் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் பிறவியிலேயே பார்வையற்ற ஒருவன் இருந்தான். அவ்வூரில் குடிகொண்டிருக்கும் ஏகாம்பர நாதரிடம் கூறமுடியாத அளவு பக்தி வைத்திருந்தான். அனுதினமும் ஆலயம் சென்று ஏகாம்பரநாதரை வணங்கி தனக்குப் பார்வை அருள வேண்டும் என வேண்டி வந்தான். ஒரு நாள் அவன் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட ஏகாம்பரநாதர், ஒரு கண்ணில் மட்டும் பார்வையை வழங்கினார். மகிழ்ந்த அவன், மற்றொரு கண்ணுக்கு நான் எவ்விடம் போவேன்? என்று கேட்டான். இறைவன் கொங்குநாடு சென்று அங்குள்ள கொடுவாய் எனும் சேத்திரத்தில் கோவர்த்தனாம்பிகையுடன் நாகேஸ்வரராக அருளும் எம்மை வணங்கினால் கண் பார்வை கிடைக்கும் என்றருளினார். இளைஞனும் அவ்வாறே கொங்குநாடு வந்து கொடுவாய் தலத்தில் வேண்ட, அவனுக்குப் பார்வை கிடைத்ததாக கர்ணபரம்பரை செய்தி ஒன்று கூறுகிறது.
கருத்துகள் இல்லை