* மாவட்டம் : திருப்பூர்
* இடம் : உடுமலைப்பேட்டை
முகவரி :
உடுமலைப்பேட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
தாலுகா : உடுமலைப்பேட்டை
வரலாறு :
ஆர்ப்பரித்துக் கொட்டும் பஞ்சலிங்கம் அருவி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள திருமூர்த்தி மலையில் அமைந்துள்ளது.
மலைகளின் அடர்வனத்தில் ஊற்றெடுத்து பெருகி வரும் நீர் அருவியாக கொட்டுகிறது.
பல மூலிகைச்செடி, கொடிகளைக் கடந்தோடி வருவதால் இந்த அருவியின் நீர், மூலிகை குணம் நிறைந்து காணப்படுகிறது.
அருவிக்கு மேலே பாறை முகடுகளுக்குள் பஞ்சலிங்கக் கோவில் இருப்பதுதான் சிறப்பு.
மூலிகை குணமுள்ள நீரில் குளிப்பதால் நம் உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.
மனநிறைவை அள்ளித்தரும் வகையில் தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான இடமாக திகழ்கிறது.
சிறப்பம்சங்கள் :
* ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி...
* மூலிகை குணம் வாய்ந்த நீர்...
* புத்துணர்ச்சி அளிக்கும் குளியல்...
* மனநிறைவான தியானம்...
* குளுமையான சூழல்...
* மூலிகை நீரில் சுகமாக குளித்துவிட்டு, மனநிறைவோடு திரும்பி செல்வதற்கு ஏற்ற இடம் பஞ்சலிங்க அருவி !!
கருத்துகள் இல்லை