* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
* இடம் : திருப்பட்டூர்
* முகவரி : சிறுகனூர், திருப்பட்டூர், திருச்சிராப்பள்ளி
* தாலுகா : திருச்சிராப்பள்ளி
வரலாறு :
பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது, பிரம்ம சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம். சிவன் கோயிலாக இருந்தாலும் இங்கு பிரம்மனுக்கு பிரம்மாண்டமான சிலையுடன், தனி சன்னதி உள்ளது.
காலபைரவர் இங்கு மேற்கு நோக்கி உள்ளார். கோயிலை வலம் வரும்போது, சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி(குரு), அடுத்து அருகில் தனிசன்னதியிலுள்ள பிரம்மா, அடுத்து சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள விஷ்ணு, அதன்பின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர் (மகேஸ்வரர்) என வரிசையாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பு மிக விசேஷமானது.
கருத்துகள் இல்லை