* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி
* இடம் : துறையூர்
முகவரி :
புளியஞ்சோலை, துறையூரிலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் புளியஞ்சோலை அமைந்துள்ளது.
தாலுகா: துறையூர்
வரலாறு :
இயற்கை எழில் கொஞ்சும் புளியஞ்சோலை, தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மலைப்பிரதேசம். இது கொல்லிமலையின் அடிவார பகுதியாகும்.
இந்த மலையானது இயற்கையான சூழலில் பசுமையாகவும், குளுகுளு சூழ்நிலையிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
புளியஞ்சோலை, நீர்வீழ்ச்சிக்கு பெயர் பெற்றதாகும். இங்கு உருவாகும் அருவியின் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆகாயகங்கை எனப்படும் மலை உச்சியில் இருந்து உருவாகும் நீர்வீழ்ச்சிகளில் புளியஞ்சோலையும் ஒன்று.
தூரத்தில் வரும்போதே, சலசலவென்று தண்ணீரின் சலங்கை சத்தம், பறவைகள் கீச்சிடும் சத்தம் என்று நம்மை வரவேற்கின்றன.
சுற்றிலும் மலை, மலை நடுவே குட்டிக் குட்டி பாறைகளின் மீதேறி துள்ளிக் குதித்தோடும் நதியின் தீர்த்த யாத்திரை. உள்ளம் கொள்ளை கொள்ளும் சுற்றுலாத் தலமான புளியஞ்சோலையின் இயற்கை இன்பத்தை அனுபவிக்கலாம்.
தண்ணீரில் அலையும் கால்களை சிறிதுநேரம் கழித்து உற்று நோக்கினால் மூலிகைத் தண்ணீரில் தோலின் நிறம் பொன்னிறமாக மாறுவதை உணர முடியும். கொஞ்சம் கையில் அள்ளிச் சுவை பார்த்தால் மூலிகையின் மணம் மனதை வருடும்.
கால்களை ஓடுகின்ற தண்ணீரில் புதைத்தால், அந்தக் குளிர்ந்த தண்ணீரின் ஸ்பரிசம் மூளைக்கு உறைக்கிறது. மனசுவிட்டு விடுதலையாகி குழந்தையாகத் தன்னை உணர செய்யும்.
முகம் காட்டாத, பெயர் தெரியாத பல பறவைகளின் கூட்டுச் சேர்ந்திசை காதுக்கு நேயர் விருப்ப விருந்தாக அமைகிறது.
இங்குள்ள காடுகளில் விதவிதமான மரங்களும், கனி தரும் மரங்களும் உள்ளன. மேலும் கனிகளின் வாசனையுடன், மூலிகைகளும் கைகோர்த்துக் கொள்ள அந்த வாசனை ஜூகல் பந்தியில் மனசு திக்குமுக்காட வைக்கிறது.
குழந்தைகள் விளையாட ஊஞ்சலும், குட்டிப் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளன.
புளியஞ்சோலையிலிருந்து திரும்பி வரும்போது, நெஞ்சில் ஒரு ராகம் இசைப்பது போன்ற பிரமை. அது, அந்த மூலிகை நீரோடையின் துள்ளல் நடையே. மேலும், சாகச சுற்றுலா பிரியர்களுக்கு சிறந்த இடமாக புளியஞ்சோலை திகழ்கிறது.
கருத்துகள் இல்லை