* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

                * இடம்    : தொட்டியம்

                * முகவரி  : தொட்டியம், திருச்சி.

                * தாலுகா    : தொட்டியம்

வரலாறு  : 

               மதுரை காளியம்மன் கோவில் அல்லது மதுரகாளியம்மன் கோவில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தொட்டியம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மூலவராக மதுரகாளியம்மன் உள்ளார். வெண் குதிரை வாகனம் பலிபீடத்திற்கு அருகே உள்ளது. மதுரை வீரன் சன்னிதியும் இத்தலத்தில் உள்ளது. இக்கோவிலை 400 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியினை ஆட்சி செய்த பாளையக்காரர் கெஜ்ஜன்ன நாயக்கர் கட்டியுள்ளார்.

கோவில் வரலாறு :

              சின்னானின் பறை இசையில் மயங்கிய மதுரை காளி, அவனுடன் அவன் ஊரான தொட்டியத்திற்கு வர சித்தம் கொண்டு, ஈ வடிவெடுத்துச் சென்றாள். சின்னான் மாடுகள் மேய்க்கும் பொழுது அடிக்கும் பறை இசையை தினமும் ஆனந்தித்துக் கேட்டாள். ஒருநாள் அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னரின் சகோதரன் குதிரையில் வந்தபோது குதிரையின் குளம்படி பட்டு, புதரிலிருந்த புற்று சிதைந்தது. புற்றிலிருந்த அன்னை கோபமுற்றதால், சகோதரன் அந்த கணமே மதி இழந்தான். செய்வதறியாது திகைத்த மன்னரின் கனவில் தோன்றிய மதுரை காளி, மதுரையில் இருந்து இசைக்கு மயங்கி வந்து தொட்டியத்தில் தான் சங்கமித்துள்ளதை சொன்னாள். உடனே அரசன் காளிக்கு திருக்கோவில் எழுப்பி உற்சவம் நடத்தினான். சகோதரனின் சித்தமும் தெளிந்தது. பறையடிக்கும் தொழிலை மேற்கொண்டிருந்த சின்னானுக்கும், அவன் சகோதரன் செல்லானுக்கும் கோவிலினுள் சிலை அமைத்தான். இந்தக் கோவிலில் மதுரைவீரன் உட்பட பல துணை தெய்வங்கள் இருக்கின்றன.

பிரார்த்தனை :

               அம்மனுக்கு தொடர்ந்து 9 அமாவாசை நாட்களில் சந்தனாதி தைலம் அபிஷேகித்து, எலுமிச்சை பழ தீபமேற்றி, 9 உதிரி எலுமிச்சைப் பழங்களை சமர்ப்பித்து வழிபட்டு வந்தால் வியாபாரத்தில் மிகுந்த லாபம், திருமண யோகம், கல்வியில் சிறப்பு உள்ளிட்ட சகல நற்பேறுகளும் கிட்டும். தல மரமான வன்னி மரத்தில் அமாவாசை நாளில் தொட்டில் கட்டி, தொடர்ந்து 11 அமாவாசை நாட்களில் அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். காளியம்மனுக்கு காவேரி நீரால் அபிஷேகம் செய்வது விசேஷம். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோவில் (உட்பிரகாரம், அம்மன் சன்னிதி மட்டும்) ஒருவாரம் அடைக்கப்பட்டிருக்கும். அப்படி அடைக்கப்படும் அம்மன் கருவறையில் இரண்டு பெரிய பானைகளில் நெய் ஊற்றி எட்டு வேட்டியால் ஆன இரண்டு பெரிய திரிகள் தயாரிக்கப்பட்டு விளக்கு ஏற்றி வழிபடுவர்.

சிறப்புகள் :

              தமிழகத்திலேயே தோளால் தூக்கிச் செல்லப்படும் மிக உயரமான தேர் இதுவாகத் தான் இருக்கும். இரண்டு தேரும் ஒரே நேரத்தில் வீதிவலம் வருவதால், சுமார் 300 பேர் ஒவ்வொரு தேரையும் சுமந்து செல்கின்றனர். இவ்விரு தேர்களையும் பக்தர்கள் தங்கள் தலையிலும், தோளிலும் சுமந்து திருவீதி உலா வருவார்கள்.

இருப்பிடம் :

               முசிறியில் இருந்து 13கி.மீ. தொலைவிலும், திருச்சி - சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 47 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை