* மாவட்டம் : திருப்பூர்

              * இடம்    : பெருமாள் மலை

              * முகவரி  : பெருமாள்மலை, திருப்பூர்

              * தாலுகா    : திருப்பூர்

வரலாறு  : 

               காங்கேய நாட்டின் கிழக்குத் திசையில் சிவன்மலை சுப்ரமணிய சுவாமியும், மேற்கு திசையில் அழகு மலை முத்துக்குமார சுவாமியும், வடக்கு திசையில் கதித்த மலை வெற்றி வேலாயுத சுவாமியும், தெற்கு திசையில் வட்டமலை உத்தண்ட வேலாயுத சுவாமியும் அருள்பாலிக்கின்றனர்.

              நான்கு திசைகளில் முருகப்பெருமான் அருளாட்சி நடத்திட, மத்தியில் உள்ள மலையில் அவரது தாய் மாமன் பெருமாள் கோயில் கொண்டு சேவை சாதிக்கிறார். இது பெருமாள்மலை என்றே அழைக்கப்படுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் இங்கு கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

              அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் சிறு தொழில் செய்யும் பக்தர் ஒருவர் தொழிலில் நஷ்டமடைய, மிகுந்த வேதனையோடு இப்பெருமாளிடம் வந்து, தினமும் உன்னை வந்து துதிக்கிறேன். இருந்தாலும் என் கஷ்டங்கள் தீர்ந்த பாடில்லை. இனியாவது எனக்கு கருணை காட்டுங்கள். என மனமுருக வேண்டினார்.

              அன்றிரவு அவர் கனவில் தோன்றிய பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், இனி உன் கஷ்டங்கள் அகலும். அனைத்து செல்வங்களும் உன்னை வந்தடையும் என்று வரம் தர, ஓரிரு ஆண்டுகளிலேயே அந்த பக்தர் சிறு தொழிலில் லாபங்கள் குவிந்து பெரும் முதலாளியாக உருவெடுத்திருக்கிறார். பின்னர் தனக்கு வாழ்வளித்த பெருமாளுக்கு நன்றிகடனாக பல திருப்பணிகளை செய்துள்ளார். கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக நின்ற நிலையில் சேவை சாதிக்கும் பிரசன்ன வெங்கடேச பெருமாள்.

அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயில் சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை