* மாவட்டம் : திருப்பூர்
* இடம் : பெருமாநல்லூர்
* முகவரி : பெருமாநல்லூர், திருப்பூர்
* தாலுகா : திருப்பூர்
வரலாறு :
ஒரு காலத்தில் மக்கள் தெய்வ பக்தியை அறவே மறந்து வெறுக்கத்தக்க பாவச்செயல்களில் ஈடுபட்டனர். நல்லோர் அழிந்து, தீயோர் பெருகினர். இதனால், கடுங்கோபங்கொண்ட சிவபெருமான் மனிதர்களின் மீது மண்மாரியை பொழிவித்தார். பூமியே அழியும் நிலைக்கு வந்தது. அப்போது சிவபக்தர்கள் சிலர், மக்களின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு நற்புத்தி கொடுத்து பாவ விமோசனம் தந்து அழிவிலிருந்து காத்தருளும்படி பார்வதி தேவியிடம் வேண்டினர்.
கருணை கொண்ட அம்பாள், மக்களுக்காக சிவனிடம் வேண்டினாள். ஆனால், அவளது வேண்டுதலுக்கு சிவன் சம்மதிக்கவில்லை. இதனால் அம்பாள் கைலாயத்தை விட்டு பூமிக்கு வந்து பெரும்பழனம் என்ற வில்வமர காட்டில், சிவனை நோக்கி மேற்கு திசையைப் பார்த்தபடி கடுந்தவம் இருந்தாள். அவளது தவத்திற்கு மதிப்பளித்த சிவபெருமான் இவ்விடத்தில் அம்பாளுக்கு காட்சி தந்தார். அம்பாள் அங்கு கோவர்த்தனாம்பிகை என்ற பெயருடன் அமர்ந்தாள். சிவன் உத்தமலிங்கேஸ்வரர் என்ற பெயரில் லிங்க வடிவானார். பிற்காலத்தில் சோழமன்னர்கள் இங்கு கோயில் எழுப்பினர்.
கருத்துகள் இல்லை