* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

                * இடம்    : திருச்சிராப்பள்ளி

முகவரி  : 

               திருச்சிராப்பள்ளியில் இருந்த 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தாலுகா    : திருச்சிராப்பள்ளி

வரலாறு  : 

                  கல்லணை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிராப்பள்ளிக்கு மிக அருகில் உள்ளது. இந்த அணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடி. திருச்சிராப்பள்ளியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி முக்கொம்பில் உள்ள மேலணையில் காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது. அதில் காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. கல்லணை காவிரியை காவிரி ஆறு, வெண்ணாறு, புது ஆறு, கொள்ளிடம் என 4 ஆக பிரிக்கிறது.

                  கல்லணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது. கல்லும், களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும். பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

கல்லணை சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை