* மாவட்டம் : திண்டுக்கல்
* இடம் : தொப்பம்பட்டி
* முகவரி : தொப்பம்பட்டி, விருப்பாட்சி, திண்டுக்கல்.
* தாலுகா : பழனி
வரலாறு :
அழகு வாய்ந்த தலையூத்து அருவி, திண்டுக்கல் மாவட்டம் விருப்பாச்சி ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
அடர்ந்த வனப் பகுதியில் உருவாகும் சிற்றாறுகள், பரப்பலாறு அணையில் தேங்கி வெளியேறும் நீரானது விருப்பாச்சி மலைக்குன்று வழியாக பாய்ந்து அருவியாக கொட்டுகிறது.
இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவது தனிச்சிறப்புதான்.
இந்த அருவியானது பலநூறு அடி உயரத்தில் இருந்து பாய்வதால் பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறது.
அருவியின் நீரை காசி தீர்த்தத்திற்கு ஈடாக கருதுவதால் 'நல்காசி' என்று அழைக்கின்றனர். மலை அடிவாரத்தில் இருந்து நங்காஞ்சி(நல்காசி) ஆறாக ஓடுகிறது.
மலைப்பகுதியில் ஏராளமான மூலிகை செடிகள் இருப்பதால் அருவியின் நீர் பல்வேறு நோய்களை தீர்க்கிறது.
இயற்கையான சுத்தமான காற்றைச் சுவாசித்தும், அருவியின் அழகை ரசித்தும் பொழுதை கழிக்கலாம்.
சிறப்பம்சங்கள் :
* அருவியின் அழகு...
* அருவியின் தீர்த்த நீர்...
* குளுமையான குளியல்...
* சுத்தமான காற்று...
* மலைகளின் காட்சி...
எப்படி அடைவது?
விருப்பாச்சியில் உள்ள நீலவரதராஜப் பெருமாள் கோவில் பின்புறமுள்ள ஒத்தையடி பாதை வழியாக நடந்து சென்றால் அருவியை அடையலாம்.
கருத்துகள் இல்லை