வீடுகட்டிய பின் - வீட்டில் அமைக்க வேண்டிய அழகு செடிகள் !!

                  * ஒரு செடி என்பது இனிமையான சூழலை வழங்குகிறது. மேலும் ஒரு செடியைப் பார்ப்பதால் மனதிற்கு ஒரு அமைதி மற்றும் நிதானம் கிடைக்கிறது.

                  * ஒரு ஆரோக்கியமான செடி உடலளவிலும் மனதளவிலும் நமக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

                  * மனித வாழ்க்கையில் செடிகளுக்கும் மரங்களுக்கும் மிக இன்றியமையாத ஒரு அங்கமாக உள்ளது.

                  * நம் வீடு எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சின்னச் சின்ன செடிகளை வளர்க்க முடியும். சமையல் அறையில் பாத்திரம் தேய்க்கும் இடமான சிங்க் (sink), வீட்டின் பால்கனி, அறைகளின் மூலைகள், மொட்டை மாடி இவையாவும் அழகு செடிகள் வளர்க்க போதுமான பகுதிகள் தான்.

                  * அத்தகைய முறையில் வீட்டிற்கும் நம் மனதிற்கும் அழகு சேர்க்கும் அழகு செடிகளை பற்றி இங்கு காண்போம்.

வீடுகளில் செடிகள் வளர்ப்பதன் முக்கியத்துவம் :

                  * பல நூற்றுக் கணக்கான செடிகள் வீடுகளில் வளர்க்க கிடைக்கின்றன. நீங்கள் ஒரு நல்ல பெரிய தோட்டத்திற்கு சென்றால், அங்கு அவர்கள் பல வகை செடிகளை விற்பனை செய்வதை பார்க்கலாம். பொதுவாக அனைத்து வகை செடிகளுக்கும் ஏதாவது ஒரு முக்கியத்துவம் உள்ளது. அவற்றை புரிந்து கொண்டும், தெரிந்து கொண்டும் சரியான தேர்வை செய்து, உங்கள் வீட்டிற்கு ஏற்ற செடிகளை வளர்த்தால், அவை நிச்சயம் நீங்கள் எதிர் பார்த்த பலனைத் தரும். மேலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செடிகளை வாங்கி வளர்க்கும் போது, அவை உங்கள் மனதிற்கு மேலும் மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகின்றது.

நீங்கள் ஏன் செடிகளை வளர்க்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய காரணங்கள் :

                  * முதலாவதாக செடிகள் ஒரு அழகிய மற்றும் ரம்மியமான சூழலை உங்கள் வீட்டில் உண்டாக்கும். அதை நீங்கள் ஆசையோடு வளர்க்கும் போது, உங்கள் மன உளைச்சல், கவலை மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குறையும்.

                  * செடிகளுக்கும் உணர்வுகள் உள்ளது. மற்ற வீட்டு வளர்ப்பு பிராணிகள் போலவே, தங்கள் எஜமானிகளின் நலனுக்காக வேண்டி வாழ்கின்றன.

                  * செடிகளும் தங்கள் உணர்வுகளை நல்ல மனம் மூலம் வெளிபடுத்தும். ஆனால் அவற்றை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

                  * செடிகள் வீட்டில் நல்ல நேர்மறை சக்திகளை அதிகரிக்கும்.

                  * அதிக இடம் இருந்து நீங்கள் நிறைய செடிகளை தோட்டம் போல அமைத்து வளர்க்கும் போது, பல பறவைகளும், பட்டாம்பூச்சிகளும் ஈர்க்கப்படுகின்றன. இவை மேலும் உங்கள் வீட்டிற்கும், தோட்டத்திற்கும் அழகு சேர்க்கும்.

                  * அனைத்து செடிகளுக்கும் ஒரு முக்கிய மருத்துவ குணங்கள் உள்ளது. உங்கள் தேவைக்கு ஏற்றவாறு நீங்கள் தேர்வு செய்து வளர்க்கும் போது, உங்கள் வீட்டில் யாருக்காவது உடனடி மருந்து தேவைபட்டால், இந்த செடிகளின் இலைகள் மற்றும் பூக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

                  * உங்கள் வீட்டு சமையல் தேவைக்கு ஏற்றவாறும் நீங்கள் செடிகளை தேர்வு செய்து வளர்க்கலாம். இத்தகைய செடிகள் உங்களது ஏதோ ஒரு காய்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகின்றது. இதனால் கடைகளில் வாங்கும் செலவுகளும் குறைகின்றது.

                  * வாஸ்து செடிகள் மற்றும் அதிர்ஷ்டம் தரக்கூடிய செடிகள் மேலும் வீட்டிற்கு நன்மைகளை தருகின்றன. இத்தகைய செடிகள் வீட்டில் நேர்மறை சக்திகளை அதிகப்படுத்தி, ஆரோக்கியம், செல்வம், ஆயுள் என்று பல நன்மைகளை அதிகரிக்க உதவுகின்றன.

செடிகளை எப்படி தேர்ந்தெடுக்கக்கூடாது?

                   * வண்ண வண்ண அழகான செடிகளை பார்த்து விட்டாலே அனைவரும் ஒரு கணம் மயங்கி நின்றுவிடுவார்கள். அத்தனை செடிகளும், ஏதோ ஒரு விதத்தில் ஒரு அழகுதான். எனினும், பெரும்பாலும், செடிகளை வாங்கும் போது பலர் சில தவறுகளை செய்து விடுகின்றனர். இதனால், அவர்களது தேர்வு தவறாகி, செடிகளை வாங்கும் நோக்கமும் நிறைவேறாமல் போய் விடுகின்றது. அப்படி நேராமல், நீங்கள் செடிகளை வாங்கும் போது சில விடயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

உங்களுக்காக இங்கே சில குறிப்புகள் :

                 * பெரும்பாலான வெட்ப மண்டல செடிகள் காற்றில் இருக்கும் நச்சுத்தன்மையை சுத்தம் செய்ய உதவும். குறிப்பாக வீட்டினுள் வளர்க்கப்படும் செடிகள் காற்றை சுத்தம் செய்து, பிராண வாயுவை அதிகம் வெளியிடும். அப்படிப்பட்ட செடிகளை நீங்கள் கவனமாக தேர்வு செய்வது நல்லது.

                 * அழகிற்காக மட்டுமல்லாது, வீட்டினுள் வைக்கப்படும் செடிகள் வேறு பல பலன்களையும் தருமா என்று பார்க்க வேண்டும்.

                 * சிறிய அறைகளில் வைக்கும் செடிகளுக்கு முட்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அதாவது முட்கள் உள்ள செடிகளை தவிர்ப்பது நல்லது.

                 * நட்சத்திர வடிவில் இருக்கும் செடிகள் மற்றும் முட்கள் இருக்கும் செடிகள் அதிக தீ(நெருப்பு) சக்தியை ஊக்கவிக்கும். அதனால், அத்தகைய செடிகளை நீங்கள் வீட்டின் அகலமான மற்றும் பரவலான ஹால் போன்ற பகுதியில் வைக்கலாம்.

                 * வட்டமாகவும், நெகிழ்வுத் தன்மையும் இருக்கும் இலைகளை கொண்ட செடிகள் அமைதியையும், நிம்மதியையும் தரும். அதனால், அப்படிப்பட்ட செடிகளை தேர்வு செய்யுங்கள்.

                 * மரம் போன்று பெரிதாக வளரும் செடிகளை அல்லது மர வகைகளை வீட்டினுள் வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். அவைகளுக்கு அதிக வேர்கள் ஓட இடம் வேண்டும். மேலும் அவை அடர்ந்து, படர்ந்தும் வளரும். அப்படியான செடிகளை வீட்டினுள் வளர்க்க தேர்வு செய்யக் கூடாது.

                 * காய்ந்த பூக்களை கொண்ட செடிகளை தவிர்ப்பது நல்லது. பூக்கள் பார்ப்பதற்கு புதிதாக பூத்திருந்தாலும், சில பூக்கள் காய்ந்து போனது போன்ற தோற்றம் தரும். அத்தகைய செடிகளை தவிர்ப்பது நல்லது.

                 * மூன்று எண்ணிக்கைகளில் இருக்கும் செடிகளை தவிர்ப்பது நல்லது. அவை உறவுகளுக்குள் இருக்கும் ஒற்றுமையை பாதிக்கக் கூடும்.

                 * உங்கள் வீட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் வைத்தால் நன்கு வளரக்கூடிய செடிகளை கவனித்து தேர்வு செய்யவும்.

                 * சிலர் பாத்ரூமில் செடிகள் வளர்க்க விரும்புவார்கள். ஆனால், அங்கேயும் போதிய சூரிய ஒளி வருகின்றதா, சற்று காற்றோட்டமாக இருகின்றதா என்பதை கவனித்து, அப்படி வைக்க ஏதுவான செடி எதுவாக இருக்கும் என்று பார்த்து தேர்வு செய்யவும்.

எந்த திசைகளில் செடிகளை வைக்க வேண்டும்?

                 * பொதுவாக, உங்கள் வீட்டிற்குள் எங்கெல்லாம் அதிக சூரிய வெளிச்சமும் காற்றும் வருகின்றதோ அந்த அறையிலும், திசையிலும் செடிகளை வைக்கலாம்.

                 * எனினும், கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசைகளில் செடிகளை வைத்தால், சூரிய கதிர்கள் இயல்பாகவே தேவையான அளவு செடிகளுக்கு கிடைக்கும்.

                 * உங்கள் வீட்டின் அமைப்பில் மேற்கு திசையில் அதிக சூரிய கதிர்கள் வரும் என்றாலோ மற்றும் காற்றும் நன்றாக வரும் என்றாலோ, மேற்கு திசைகளிலும் நீங்கள் செடிகளை வைக்கலாம்.

                 * சிலர் வீட்டின் ஹால் பகுதியில் செடிகளை வளர்ப்பார்கள். அப்படி வளர்க்க வேண்டும் என்றால், நீங்கள் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை அந்த செடிகளை வெயிலில் எடுத்து வைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், தினமும் சூரிய கதிர்கள் அதன் மீது படும்படியான இடத்தில் வைக்க வேண்டும்.

                 * அடுப்பங்கரையிலும் செடிகளை நீங்கள் வைக்கலாம். ஆனால், அடுப்பின் அக்னி வெப்பம் செடிகளை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட செடிகளை தேர்வு செய்யும் முறை :

                  * இன்று பெரும்பாலான மக்கள், பிடித்திருகின்றதோ அல்லது விருப்பம் இருகின்றதோ, அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கையிலாவது பல செடிகளை வாங்கி ஆர்வத்தோடு வளர்த்து வருகின்றனர். இந்த ஆர்வத்தில், நீங்கள் தேர்வு செய்யும் செடிகளும் உங்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

                  * முதலில் நீங்கள் செடிகளை வாங்கும் முன், நீங்கள் வாழும் இடத்தின் தட்பவெப்ப நிலை அந்த செடிகள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்குமா என்று பார்க்க வேண்டும்.

                  * உங்கள் வீட்டிற்குள் வரும் சூரிய ஒளியின் அளவு, மற்றும் சுத்தமான காற்றின் அளவும் கூட செடிகள் ஆரோக்கியமாக வாழ உதவும். அதனால் போதிய காற்றோட்டமும், வெளிச்சமும் வீட்டிற்குள் வருவதற்கு ஏற்றவாறு செடிகளை தேர்வு செய்யவும்.

                  * சில செடிகள் விற்பனை தோட்டத்தில் பார்ப்பதற்கு அழகாகவும், ஆரோக்கியமானதாகவும் இருந்தாலும், உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்ததும், ஓரிரு நாட்களில் குன்றிவிடக் கூடும். இதன் காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறான செடிகளை தேர்வு செய்ய வேண்டும்.

                  * செடிகளின் விலைகளையும் கவனிக்க வேண்டியது முக்கியம். சில செடிகள் மலிவான விலையில் கிடைக்கும். ஆனால் சில செடிகள் அதிக விலை உடையதாக இருக்கும். உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்தவாறு செடிகளை தேர்வு செய்ய வேண்டியது முக்கியம்.

செடியின் பராமரிப்பு :

                  * சில செடிகளுக்கு அதிக பராமரிப்புத் தேவைப்படும். சில செடிகளை எளிதாக குறைந்த பராமரிப்பு அல்லது வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ தண்ணீர் ஊற்றுவதை தவிர வேறு எந்த பராமரிப்பும் இல்லை என்பது போலவும் செடிகள் இருக்கும். அவற்றில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

                  * ஒரு சில செடிகள் சிறியதாக வாங்கி வந்து வளர்த்தாலே, நாளடைவில், விரைவாக பெரிதாகவும், அடர்த்தியாகவும் மற்றும் படர்ந்தும் பல செடிகளாக பெருகி விடக் கூடும். அத்தகைய செடிகளை பராமரிக்க உங்கள் வீட்டில் போதிய இடம் உள்ளதா என்று நீங்கள் பார்த்து வாங்க வேண்டும்.

                  * சில செடிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், பெரிதாக வளரவே வளராது. அவை அழகிற்காகவும், வாஸ்து காரணங்களுக்காகவும் வளர்க்கப்படும். இது உங்கள் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இருக்குமா என்று பார்த்து பின் தேர்வு செய்ய வேண்டும்.

                 * நீங்கள் வாங்கும் செடியை எந்த இடத்தில் உங்கள் வீட்டில் வைக்கப் போகின்றீர்கள் மற்றும் அந்த இடம் அந்த செடிக்கு ஏற்றதாக இருக்குமா என்றும் பார்த்து வாங்க வேண்டும்.

வீட்டில் நாம் அழகு செடிகள் வைக்கும் முன் நம் கவனத்தில் கொள்ள வேண்டியவை :

வீட்டுக்கு ஏற்ற செடி :

                 * உங்கள் வீட்டின் கட்டிட அமைப்பை முதலில் புரிந்து கொண்டு உட்புறத் தோட்டத்தைத் திட்டமிடுவது நல்லது. அதாவது தொட்டியில் பூச்செடி வளர்ப்பதென்றால் தொட்டி வைக்கப்படும் அந்த இடத்தில் போதுமான சூரிய ஒளி இருக்க வேண்டும்.

                 * அதே பசலைக் கொடி போன்ற படர்ந்து வளரும் செடியை வளர்க்க அகலமான கிரில் கம்பிகள் இருக்க வேண்டும். க்ரோட்டன்ஸ் வகைச் செடிகள் என்றால் அவை வளர ஏதுவான தட்ப வெட்பம் வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாகச் செடிகளோடு நேரம் செலவழித்து அவற்றைப் பராமரிக்கும் மனம் வேண்டும்.

வீட்டுக்கு ஏற்ற ஜாடி :

                 * நீங்கள் வளர்க்கப் போகும் செடி மற்றும் தொட்டி இவை இரண்டையும் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் வீட்டு அறையின் வண்ணம் தன்மையோடு ஒத்துப்போகும் விதத்தில் இவை இருக்க வேண்டும்.

                 * செடியின் தொட்டியைச் சுவாரசியமாக அலங்கரிப்பது கூடுதல் அழகு தரும். உதாரணத்திற்கு, ஆறுகோண வடிவில் இருக்கும் கண்ணாடித் தொட்டியில் சில கூழாங்கற்களைப் போட்டு ஒரு டேபிள் ரோஸ் செடி வைத்தால் எளிமையாகவும், அழகாகவும் இருக்கும்.

                 * பால்கனியில் செடிகளை வளர்ப்பதாக இருந்தால், அதீத குளிர் அல்லது கடும் வெயில் தாக்காத வண்ணம் ஒரு மெல்லிய திரை போடுது நல்லது.

செங்குத்துத் தோட்டம் :

                   * உங்கள் அறைகள் குறுகலாக இருக்கும் பட்சத்தில், செங்குத்தாகச் செடிகளை வளர்க்கலாம். ஒரு நீளமான குச்சை நட்டு அதன் மீது கொடிகளை வளர்க்கலாம். இதன் சிறப்பம்சங்கள் என்னவென்றால், வெளிச்சத்தை நோக்கி வளரும் தன்மை கொண்டவை செடிகள். அப்படி இருக்க உங்கள் வீட்டுக் கட்டிடத்தில் இருக்கும் அழகற்ற பகுதிகளை இது மறைக்க உதவும்.

                   * சன்னல் கிரில்களோடு பின்னிப் பிணைந்து வளர்ந்து அழகூட்டும். எத்தகைய நெரிசலான பகுதியில் நீங்கள் குடியிருந்தாலும், இந்தச் செடிகள் கண்ணுக்குக் குளிர்ச்சியான இடமாக உங்கள் வீட்டை மாற்றும். இப்படிச் செய்வதை செங்குத்துத் தோட்டக்கலை என்றே அழைக்கிறார்கள்.

தொங்கும் தோட்டம் :

                   * பீங்கான் தொட்டிகள் அல்லது கம்பியால் பின்னப்பட்ட தொட்டிகளை வீட்டுக் கூரையில் கட்டித் தொங்கவிட்டும் சிறு சிறு செடிகளை வளர்க்கலாம்.

                   * பழைய மரப்பெட்டிகள், உடைந்த மரச்சாமான்களின் பகுதிகள் இவற்றில் அழகுபடுத்தும் சில பொருள்களை அடுக்கி செடி வளர்க்கும் தொட்டிகளாக மாற்றலாம்.

                   * நீங்கள் வளர்க்கும் செடியைப் போலவே அது வளர்க்கப்படும் கொள்கலனும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வித்தியாசமான வடிவங்களில் இருக்கும் பொருள்களில் செடிகளை வளர்க்கும்போது நிச்சயம் அது தனியொரு அழகைத் தரும்.

வீட்டை நந்தவனமாக்கும் அழகு செடிகள் :

                  * சிலரின் வீட்டிற்குள் நுழையும் போதே பூக்களின் வாசம் வருபவர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும். வீடுகளின் அழகை அதிகரித்துக் காட்டுபவை பசுமையான தாவரங்கள். நடைபாதை ஓரங்களிலும், காம்பவுண்ட் சுவர் ஓரங்களில் பெரும்பாலான எழிலூட்டும் பூக்களை உடைய மறைப்புச் செடிகள் அதிகம் விரும்பப்படுகின்றன. சற்றே உயரமாக வளரும் செம்பருத்தி, லன்டோனா, மாதுளை போன்ற செடிகள் நம் நாட்டில் அதிகம் மறைப்புச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன. இவற்றின் பூக்கள் பல வண்ணங்களில் உள்ளதால் நிலையான பெருஞ்செடிகளாக வளர்க்கப்படுகின்றன.

வீடுகளுக்கு ஏற்ற அழகு செடிகள் :

                 * இத்தகைய செடிகள் பார்ப்பதற்கு மலை போல காட்சியளித்தாலும் அழகிய இலை மற்றும் பூக்களைக் கொண்ட தன்மை உடையவை. சிறிய வீடுகள் மற்றும் தோட்டத்திற்கு மிகவும் ஏற்றவை. வீடுகளின் முன்பகுதியில் பெரும்பாலான பூக்கின்ற தன்மையையுடைய செடிகள் வளர்க்கப்படுகின்றன.

                 * உயரமாக வளரும் செம்பருத்தி செடிகள் வருடந்தோறும் பசுமையான இலைகளையும் அழகிய வண்ணங்களில் பூக்களையும் தரக்கூடியது. அனைவரின் வீடுகளிலும் இதனை விரும்பி வளர்ப்பவர்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.ஓரடுக்கு, பல அடுக்கு என பூக்கள் பூக்கும். அழகான இதழ்களை உடையது.

                 * மல்லிகை, முல்லை போன்ற தாவரங்கள் வருடத்தில் 5-6 மாதங்கள் பூக்கும் தன்மையுடையது. அழகோடு வாசனையும் தரக்கூடியது. உயரமாக வளரும் பவள மல்லிச் செடியானது கீழ்நோக்கி கிளைத்து பூக்கும் தன்மையுடையது. பூக்கள் இரவு நேரத்தில் விரிவடைந்து நறுமணத்தைப் பரப்பும்.

                 * கோழிக்கொண்டை, வாடாமல்லி, பந்திப்பூ போன்றவை அதற்கேற்ற மாதங்களில் பூத்து வீட்டை அழகூட்டக் கூடியது. மாலை பொழுதில் பூக்கும் அஞ்சுமணி மாலையையே தன் வருகையாக கொண்டுள்ளது.

                 * செவ்வந்தி, துளசி, நந்தியாவட்டை போன்றவை வீட்டை அலங்கரிக்க கூடியவைகளில் ஒன்று. நித்திய கல்யாணி செடி அதிகம் கிளைத்து வருடந்தோறும் வெள்ளை சிவப்பு நிறங்களில் பூக்கும் ஒரு பொதுவான தாவரம்.

                 * சவுக்கு, லட்சக்கொட்டைக் கீரை போன்ற இலை அழகுப் பெருஞ்செடிகள் மற்றும் செம்பருத்தி, டெக்கோமா, இச்சோரா போன்ற பூ அழகுப் பெருஞ்செடிகளும் வளர்க்கப்படுகின்றன. இத்தகைய செடிகள் பூந்தொட்டிகளிலும் வளர்க்க ஏற்றவை.

                 * வருடந்தோறும் பூக்கின்ற தன்மையுடையது. சிறப்பு, வெள்ளை நிறங்களில் பூக்கும் தண்டு மூலம் பயிர் பெருக்கும். அதிக முட்கள் உள்ள லன்டானா செடி மிகவும் அடர்த்தியாக வளரும் மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பூக்கின்றன.

                 * அகாலிபா எனப்படுவது அழகிய இலை அலங்காரச் செடி ஆகும். இந்தப் பூக்கள் மேல்நோக்கியோ, கீழ்நோக்கியோ வளரும் தன்மையுடையது. பென்டாஸ் எனப்படுவது ஒரு நீண்ட கால அலங்காரச் செடி ஆகும்.வெள்ளை சிவப்பு மற்றும் அடர் சிவப்பு நிறங்களில் பூக்கும்.

                 * காகிதப்பூ தாவரம் உயரமாக வளரும் ஒரு கொடி வகைத் தாவரம், முள் உள்ள இக்கொடிகள் நட்சத்திர வடிவ பூக்களை உடையது. வறட்சியை தாங்கி வளரும்.

                 * டிசம்பர் கனகாம்பரம் அதிக உயரம் வளராத பெருஞ்செடி, மஞ்சள் வயலட் நிறத்தில் பூக்கள் பூக்கும். பெரும்பாலும் பனிக்காலத்தில் பூத்துக் குலுங்கும்.

                 * குரோட்டன்ஸ் செடிகள் மிதமான உயரத்தில் பல இலை வடிவம், வண்ணங்களில் வளரும் தன்மையுள்ளது. பவுட்டர் பப் சற்றே குட்டையான இச்செடிகளின் கிளைகள் அகன்றதாகவும் பரந்ததாகவும் இருக்கும் பூக்கள் அடர்சிவப்பு நிறத்தில் பூக்கும் தன்மையுடையது.

                 * உயரமாக வளரும் முள்ளுடைய செடி வகை. ஊதா நிற பூக்களையும், மஞ்சள் நிற காய்களையும் கொண்டது. இலை அழகு கண்ணைக் கவரும். முள்ளுடைய செடி உடையதால் அடிக்கடி வெட்டிவிட வேண்டியிருக்கும். கிராப்டோபில்லம் எனப்படும் இலை அழகுச் செடியான தாவரம் நிழலுள்ள இடங்களில் வளர்க்க ஏற்றது.

வீட்டில் உள்ள தூசிகளை நீக்கும் அலங்கார செடிகள் :

                  * தற்போது அனைவரும் பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்களில் வாழ்ந்து வருகிறோம். இதனால் வீட்டைச் சுற்றி அழகான தோட்டம் அமைக்க முடியாமல் போகிறது. ஆகவே பலர் வீட்டின் உள்ளே வளர்க்கக்கூடிய சில செடிகளை வளர்க்கின்றனர். பொதுவாக சாதாரண செடிகளுக்கு சூரிய வெளிச்சம் மற்றும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஒரு வேளை அத்தகையவை முறையாக கிடைக்காவிட்டால், செடிகள் வாடிவிடும். இப்படி சாதாரண செடிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளதே, அப்படியெனில் வீட்டின் உள்ளே சூரிய வெளிச்சம் இல்லாமல் வளரக்கூடிய செடிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

                 * மேலும் வீட்டின் உள்ளே செடிகளை வளர்த்தால் ஒரு நன்மை உள்ளது. அது என்னவென்றால் வீட்டின் உள்ளே செடிகளை வளர்த்தால், வீட்டில் தூசிகள் இல்லாமல் இருக்கும். ஏனெனில் வீட்டில் இருக்கும் தூசிகள் அனைத்தையும் செடிகள் உறிஞ்சிவிடும். அதுமட்டுமல்லாமல், இத்தகைய செயலை அனைத்து செடிகளும் முறையாக செய்யும் என்று சொல்ல முடியாது. ஆனால் வீட்டில் தூசிகள் படிவதை தடுக்கும் படியான சில செடிகள் உள்ளன. மேலும் இத்தகைய செடிகள், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாதவாறு இருக்கும்.

ஸ்பைடர் பிளாண்ட் (Spider Plant) :

                * வீட்டில் உள்ள மாசுக்களை சுத்தமாக வெளியேற்றும் செடிகளில் முக்கியமானது ஸ்பைடர் பிளாண்ட் ஆகும். இந்த செடி தூசிகளை மட்டும் போக்குவதோடு, வீட்டிற்கு அழகையும் கொடுக்கும்.

ஃபேர்ன்ஸ் (Ferns) :

                 * இந்த செடியின் இலைகள் மிகவும் அழகாக ப்ரில் போன்று காணப்படும். அதிலும் பாஸ்டன் ஃபேர்ன் செடி, வீட்டில் ஈரப்பதத்தை வெளியேற்றி, தூசிகளை நீக்கும். மேலும் இது பார்ப்பதற்கு ப்ளாஸ்டிக் இலை போன்று க்யூட்டாக இருக்கும்.

ஐவி (Ivy) :

                 * இது ஒரு வகையான படர்க்கொடி. இந்த கொடியும் வீட்டில் வளர்க்கக்கூடிய உள்அலங்கார செடிகளில் மிகவும் பிரபலமானது. அதிலும் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள், வீட்டில் இதனை வளர்ப்பது நல்லது.

கமுகு மரம் (Areca Palm) :

                * இந்த செடியின் இலைகள் பார்ப்பதற்கு தென்னை மரத்தின் இலைகளைப் போன்று காணப்படும். ஆனால் இந்த செடியை வீட்டின் உள்ளே வளர்த்தால், வீட்டில் நல்ல குளிர்ச்சியான காற்று வீசுவதோடு, தூசிகளும் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும்.

கோல்டன் போதோஸ் (Golden Pothos) :

                 * இந்த செடியை டெவில் ஐவி என்றும் சொல்வார்கள். இந்த செடியானது வீட்டில் உள்ள ஃபார்மால்டிஹைடு, பென்சைன் மற்றும் சைலின் போன்ற தூசிகளை முற்றிலும் வெளியேற்றி, வீட்டை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

கற்றாழை :

                 * பெரும்பாலான வீடுகளில், வீட்டின் உள்ளே வளர்க்கப்படும் செடிகளில் கற்றாழையும் ஒன்று. நிறைய பேர் இந்த செடியை ஒரு குழந்தை போன்றும், தெய்வம் போன்றும் நினைத்து பாதுகாப்புடன் வளர்ப்பார்கள். ஆனால் உண்மையில் இந்த செடியை வீட்டின் உள்ளே வளர்த்தால், வீட்டினுள் இருக்கும் அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

சைனீஸ் எவர்க்ரீன் (Chinese Evergreen) :

                 * இந்த செடியானது வீட்டினுள் வரும் காற்றை சுத்தப்படுத்துவதில் சிறந்தது. மேலும் தற்போது நிறைய பேர், இந்த செடியைத் தான் வீட்டில் வளர்க்கின்றனர்.

ஸ்நேக் பிளாண்ட் (Snake Plant) :

                 * உள்அலங்காரச் செடிகளுள் ஸ்நேக் பிளாண்ட் முக்கியமானது. இந்த செடி வீட்டிற்கு அழகை மட்டும் தருவதோடு, வீட்டில் சுத்தமான காற்றினை தருகிறது.

மார்ஜினட்டா (Marginata) :

                * செடி வளர்க்க விரும்புவோர், இந்த செடியின் அழகை விரும்பாமல் இருக்கமாட்டார்கள். இந்த செடியானது அந்த அளவில் அழகாக இருப்பதோடு, அசுத்தக் காற்றினை சுத்தப்படுத்தி வீட்டினுள் நுழைய விடுகிறது. மேலும் வீட்டில் இருக்கும் தூசிகளையும் நீக்குகிறது.

பீஸ் லில்லி (Peace lilly) :

                  * வீட்டில் அழகான செடி வளர்க்க ஆசைப்பட்டால், பீஸ் லில்லியை வளர்த்து வாருங்கள். இது அழகுடன், வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.

நேர்மறை சக்தி & அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் செடிகள் :

                 * பல வகை செடிகள் வீட்டினுள் வளர்ப்பதற்காக கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலான செடிகள் நேர்மறை சக்திகளை ஈர்ப்பதாகவும், அதிர்ஷ்டத்தை அதிகப்படுத்துவதாகவும் தான் இருக்கும். அந்த வகையில் நீங்கள் எந்த செடியை வாங்கலாம் என்ற தொகுப்புகள் சில :

மணி மரம் :

                * இது அதிகம் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் கிடைக்கும் செடி வகை. இது பெங் ஷுய் அதிர்ஷ்டத்திற்கு புகழ் பெற்றது. இது அதிக செல்வத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகின்றது.

மணி பிளான்ட் :

                * இது மிகவும் பிரபலமான செடி. இது அனைத்து சீதோஷா நிலைகளிலும் வளரும். இது மிக எளிதாக கிடைக்ககூடிய கொடி வகையை சேர்ந்தது. இது அதிக செல்வத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகின்றது. இது பல வண்ண இலைகளில், அதாவது வெள்ளை மற்றும் பச்சை கலந்த இலைகள், வெளிர் பச்சை அல்லது சற்று மஞ்சள் சாயல் கொண்ட நிற இலைகள், அடர் பச்சை நிற இலைகள் என்று பல வகைகளில் கிடைகின்றது.

அதிர்ஷ்ட மூங்கில் :

                 * இந்த மூங்கில் செடி, மிக சிறியதாக இருக்கும். இதனை வீட்டின் எந்த பகுதியிலும் வைத்து வளர்க்கலாம். இதற்கு சிறிது தண்ணீர் மட்டுமே தேவை. பராமரிப்பும் எளிது. இந்த செடி அதிக செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் என்று நம்பப்படுகின்றது.

கோல்டன் பதோஸ் :

                 * இந்த வகை செடிகள் மணி பிளான்ட் வகையை சேர்ந்தது. இது இந்தியாவில் மிகவும் பிரபலமான செடி. இதற்கு பல்வேறு பெயர்களும் உள்ளன. இதற்கு இருதய வடிவில் இருக்கும் இலைகள் இருக்கும். இந்த செடி செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது.

பீஸ் லில்லி :

                * இந்த செடி பெங் ஷுய் வகையை சேர்ந்தது. இது நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது. இதற்கு காற்றை சுத்தம் செய்யும் பண்புகள் உள்ளன. எனினும், இதற்கு வாரம் ஒரு முறையாவது தேவையான தண்ணீர் ஊற்ற வேண்டும் மற்றும், சூரிய வெளிச்சம் ஓரளவிற்காவது தேவைப்படும்.

சினேக் பிளான்ட் :

                 * இந்த செடி வீட்டில் அதிக அளவு வளர்க்கப்படும் செடி வகை. இதற்கு பல பெயர்களும் உள்ளன. இது பெங் ஷுய் வகையை சேர்ந்த செடி. இது நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது. இதற்கு காற்றை சுத்தம் செய்து, காற்றின் தரத்தை அதிகப்படுத்தும் பண்புகள் உள்ளது.

அக்லானிமா :

                 * இந்த செடி வகை வீட்டினுள் அதிகம் வளர்க்கப்படுபவை. இது தென் ஆசிய பகுதிகளில் அதிகம் காணப்படும். இது பல வகைகளில் உள்ளது. அதிக குளிர் உள்ள இடங்களில் இது அதிகம் வளரும். காற்றை சுத்தம் செய்யும் பண்புகள் இதற்கு உண்டு. வீட்டிமுள் இருக்கும் மாசுபட்ட காற்றை அகற்றி சுத்திகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. வெள்ளை நிறத்தில் இருக்கும் செடி, அதிக அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது.

ஆர்சிட் செடி :

                  * இந்த செடி வகை மிகவும் பிரபலமானவை. இது நல்ல அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும் வீட்டிற்குள் கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது. இது அழகிய மலர்களைத் தரும். இந்த செடியை தென்மேற்கு பகுதியில் வைத்து வளர்த்தால் அதிக அதிர்ஷ்டம் உண்டாகும். மேலும் நேர்மறை சக்திகளையும் அதிகரிக்கும்.

ஜேட் செடிகள் :

                 * இந்த செடிகளை அதிகமாக தொழில் நடக்கும் இடங்களில், அலுவலகங்களில் வைப்பார்கள். இது சிறிய அளவு இருந்தாலும், நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது. இது அதிக செல்வம் மற்றும் வெற்றியை கொண்டு சேர்க்கும் என்றும் நம்புகின்றனர்.

பாட்டட் ஆர்சிட் :

                 * இந்த வகை செடிகள் அழகிய பூக்களை கொண்டிருக்கும். இது அழகிற்காக மட்டும் வளர்க்கப்படுபவை அல்ல. இது பெங் ஷுய் வகையை சேர்ந்தது. இதற்கென்றே தனித்துவம் உள்ளது. இது அன்பு, அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது.

பிலோடேன்றோன் :

                 * இந்த செடி வீட்டினுள் வளர்க்க ஒரு ஏற்ற செடியாக உள்ளது. இதற்கு இருதயம் போன்ற வடிவிலான இலைகள் உள்ளன. இது அன்பு மற்றும் நல்ல அமைதியான சூழலை வீட்டினுள் உண்டாக்குவதாக நம்பப்படுகின்றது. வெளிச்சம் குறைந்த மற்றும் குளிர்ந்த இடத்தில் இதனை வைக்கலாம்.

இங்கிலீஷ் ஐவி :

                 * இந்த செடி கூர்மையான முனை கொண்ட இலைகளை கொண்டிருக்கும். இது நச்சு தன்மையை காற்றில் இருந்து அகற்றி, நல்ல சூழலை வீட்டினுள் உண்டாக்கும்.

அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் பால்கனி செடிகள் :

                  * வீட்டினுள் வளர்ப்பதை போலவே, வீட்டிற்கு வெளியே வளர்க்கப்படும் சில செடிகளும் நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குகின்றன.

ஸ்பைடர் பிளான்ட் :

                * இது ஒரு மூலிகை வகையை சேர்ந்த செடி என்றும் கூறலாம். இது தென் ஆப்ரிக்காவில் அதிகம் காணப்படும். இதை அதிகம் வீட்டில் வளர்ப்பார்கள். இது 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நன்கு வளரும். இது காற்றின் தரத்தை அதிகரிக்கும். மேலும் இதனை வீட்டில் வளர்க்கும் போது, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் குறைய உதவும்.

மீன் வாழ் பெர்ன் (fish tail fern) :

                * இந்த செடி ஆஸ்திரேலியா நாடுகளில் அதிகம் காணப்படுகின்றது. இது அதிக பிரபலமான செடி வகை. இது காற்றில் இருக்கும் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் கிருமிகளை கொன்று விடுகின்றது. இதற்கு அதிக சூரிய ஒளி தேவை இல்லை. மேலும் சிறிது வெளிச்சம் இருந்தாலே போதும், இது நன்கு வளரும்.

லெமன் பாம் (lemon balm) :

                * இந்த வகை செடி மத்திய ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படும். இது நல்ல எண்ணங்களை தோன்ற செய்யும். இது நல்ல மனநிலையை உண்டாக்கும். இது காற்றை சுத்தம் செய்யும். மேலும் காற்றில் இருக்கும் கிருமிகளை அளிக்கும். இது அதிக வெப்பம் நிறைந்த பகுதிகளிலும் நன்கு வளரும். இதனை வீட்டினுள் மற்றும் வீட்டிற்கு வெளியிலும் வளர்க்கலாம்.

ரப்பர் செடி :

                 * இது மிகவும் பிரபலமான செடி வகை. இது பொதுவாக அனைத்து சீதோஷா நிலைகளிலும் நன்கு வாழும் தன்மைக் கொண்டது. இது செல்வத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகின்றது. இது பெங் ஷுய் வகையை சேர்ந்தது. இது அதிர்ஷ்டத்தை அதிகம் உண்டாக்கும் என்று நம்பப்படுகின்றது.

துளசி :

                 * இதை பற்றி கூறவே வேண்டாம். இதற்கு அதிக மருத்துவ குணங்கள் இருந்தாலும், மக்கள் இந்த செடியை கடவுளுக்கு நிகராக வைத்து பூஜை செய்கின்றனர். இது நல்ல அதிர்ஷ்டத்தையும், நன்மைகளையும், செல்வத்தையும், ஆயுள் ஆரோக்கியத்தையும் கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது.

பாம்பு செடி (snake plant) :

                 * இந்த செடி வீட்டினுள் மற்றும் வெளி புறங்களிலும் வளர்க்கலாம். இது நீண்ட அடர்ந்த இலையை கொண்டிருக்கும். இது காற்றில் இருக்கும் நச்சை சுத்தம் செய்யும், சுத்தமான பிராண வாயுவை வெளியேற்றும். இது நல்ல அதிர்ஷ்டத்தை உண்டாக்குவதாக நம்பப்படுகின்றது.

பால்ம் செடிகள் :

                 * இந்த வகை செடிகள் மிகவும் அழகாக இருக்கும். இவை அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது. இந்த செடிகளுக்கு சிறிது சூரிய ஒளி தேவை, ஆனால் அதிக அளவு படக் கூடாது. பால்கனி போன்ற இடங்களில் வைத்து வளர்க்க ஏற்ற செடியாக இந்த செடி இருக்கும்.

மணி மரம் (money tree) :

                * இந்த வகை செடிகள் வீட்டிற்குள்ளும், வெளி புறங்களிலும் வளர்க்க ஏற்றதாக இருக்கும். போதுமான சூரிய ஒளி மற்றும் பராமரிப்பு இருந்தால், இது சற்று பெரியதாக வளரும். இது அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஈர்ப்பதாக நம்பப்படுகின்றது.

போஸ்டன் பெர்ன் :

                 * இந்த செடி வகைகளை வீட்டின் முகப்பு மற்றும் அதிக பரந்த இடங்களில் வைக்கலாம். நல்ல அழகை சேர்க்கும் செடியாக இது இருக்கும். இந்த செடியை பால்கனி போன்ற இடங்களில் மேலே தொங்க விட்டும் வளர்க்கலாம். இது நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும். மேலும் செல்வத்தையும், நன்மைகளையும் ஈர்க்கும் என்று நம்பப்படுகின்றது.

மார்னிங் க்ளோரி (morning glory) :

                * இந்த வகை செடி அழகான மலர்களை கொண்டது. இது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் உண்டாக்கும் என்று நம்பப்படுகின்றது. இது நல்ல தூக்கத்தை தரும். மேலும் ரமியமாக இருக்கும். இந்த செடிகளை நன்கு பராமரித்து வந்தால், நன்கு அடர்த்தியாக வளர்வதோடு, அதிக பூக்களையும் தரும். இதனை வீட்டினுள்ளும் வளர்க்கலாம்.

வீட்டில் அமைக்க வேண்டிய அழகு செடிகள் !!

கருத்துகள் இல்லை