வீடுகட்டிய பின் - கட்டிய வீட்டிற்கு அழகு சேர்க்க என்னென்ன புகைப்படங்களை மாட்டலாம்?
* வீட்டை அழகாகக் கட்டுவதைக் காட்டிலும் கட்டிய வீட்டை அலங்கரிக்கப்பது அவசியம். அப்போதுதான் முழுமையான அழகு வீட்டுக்குக் கிடைக்கும். வீட்டு அலங்காரம் என்றதும் செலவு அதிகம் ஆகும் என நினைக்க வேண்டாம். புதுமையான சிந்தனைகள் இருந்தாலேயே போதுமானது. வீட்டைக் கண்ணைக் கவரும் வகையில் மாற்றலாம்.
* வீட்டின் வரவேற்பறையில் இனிய நினைவூட்டும் உங்கள் குடும்பப் புகைப்படங்களை மாட்டி வைக்கலாம். புகைப்படங்களை வைப்பதற்கான பலவிதமான போட்டோ ஃப்ரேம்கள் இப்போது சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி மாட்டலாம். உங்கள் தாத்தா, பாட்டியின் புகைப்படங்களை அழகான ஃப்ரேம்களில் இட்டு மாட்டலாம். இல்லை எனில் அழகான ஓவியங்களை உங்கள் வீட்டின் வண்ணத்திற்கேற்பத் தேர்வு செய்து மாட்டலாம்.
* வீட்டிற்கு அழகு சேர்க்க சில புகைப்படங்களை வீட்டில் மாட்டலாம். அது என்ன என்று இப்போது பார்க்கலாம்.
* யானையின் தும்பிக்கை மேல் நோக்கி இருப்பது போன்ற புகைப்படத்தை கிழக்கு பக்கமாக வைக்க வேண்டும். யானை - அறிவு, பலம், சக்தி இவற்றைக் குறிக்கும்.
* போர் வீரன், போர் விமானம் ஆகியவற்றை வைக்கலாம்.
* ஒற்றைக் கொம்புடைய குதிரையின் படத்தை மாட்டலாம். இது பெருமையுடைய சின்னமாகும்.
* ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக இரண்டு கொக்கு, இரண்டு பறவைகள் கொண்ட படங்களை வீட்டில் மாட்டலாம்.
* செல்வத்தை மேம்படுத்தும் மான் படத்தை வீட்டில் மாட்டி வைக்கலாம்.
* கை விசிறியை சுவரில் மாட்டலாம். கடவுளின் படங்களை வைக்கலாம்.
* அலாரம் அடிக்கும் கடிகாரத்தை படுக்கை அறை மேஜையில் வைக்கலாம்.
* தைரியத்தையும், வீரத்தையும் குறிக்கும் சிங்கம் படத்தை வைக்கலாம். அதுவும் குட்டியுடன் கூடிய தாய் சிங்கத்தின் படத்தை வைக்கலாம்.
விநாயகர் :
* வீட்டின் நுழைவாயில் சுவற்றில் எதுவுமே இல்லாமல் இருக்க கூடாது. அது தனிமையை உணர செய்யும். ஏதேனும் ஒரு சிலை அல்லது விநாயகர் படத்தை மாட்டி வைக்கலாம்.
அனுமான் :
* உங்களது வீடு அல்லது கட்டிடம் தவறான திசையில் கட்டப்பட்டிருந்தால், வீட்டில் பஞ்சமுகி அனுமான் புகைப்படத்தை வைக்கலாம்.
தியானம் :
* வடகிழக்கு திசையை நோக்கி தியானம் செய்வது சிறந்தது. இந்த திசை நோக்கி தியானம் செய்வதால் தெய்வீக எண்ணங்கள் மேம்படும். இதனால் தியானம் செய்வது போன்ற படத்தை வைக்கலாம்.
சாலையின் புகைப்படம் :
* நல்ல பார்வை மற்றும் திட்டமிட்டு செயல்படும் திறன் மேம்பட, நீளமான சாலை இருப்பது போன்ற புகைப்படத்தை வடமேற்கு திசையில் வைக்கலாம்.
குடும்ப புகைப்படங்கள் :
* உங்களது குடும்ப புகைப்படங்களை மஞ்சள் அல்லது தங்க நிற பிரேம் போட்டு தென்மேற்கு திசையில் வைக்கலாம். இது ஆரோக்கியமான உறவுகள் நீடிக்க உதவும்.
சூரியன் உதயம் :
* சூரியன் உதயமாவது போன்று உள்ள புகைப்படம் அல்லது பெயிண்டிங்கை கிழக்கு பக்கமாக வைத்தால், சமூகத்துடன் ஆன உறவுகள் மேம்படும்.
குதிரை :
* குதிரை ஓடுவது போன்ற புகைப்படத்தை தெற்கு பக்கமாக வைப்பது வீட்டில் செல்வம் மற்றும் மகிழ்ச்சியை தக்க வைக்க உதவும்.
பரவசம் தரும் ஃப்ரேம் வகைகள் :
* வீடுகளின் சுவர்களில் நமக்கு பிடித்த புகைப்படங்களை கொண்ட ஃப்ரேம் வகைகளை மாட்டினால் வீட்டின் அழகு அதிகரிக்கும்.
பெயிண்ட்டிங் செய்யப்பட்ட ஃப்ரேம் :
* நமது வீட்டு சுவர்களில் பெயிண்ட்டிங் செய்யப்பட்ட ஃப்ரேம் வகைகள் அல்லது ப்ரிண்ட் அவுட் செய்யப்பட்ட ஃப்ரேம் வகைகளை இடத்திற்கு தகுந்தவாறு சுவர்களில் பொருத்தினால் வீடு இன்னும் அழகு பெரும்.
பிளைவுட் டிசைன்ஸ் புகைப்படம் :
* வீட்டு சுவர்கள் மற்றும் சுவர்களின் மூளைப் பகுதிகளில் அழகான பிளைவுட் வகைகளை கொண்டு நமக்கு பிடித்த டிசைன்களில் பிடித்த இடங்களில் அழகாக டெக்கார் செய்தால் வீடு மிக அழகாக இருக்கும்.
மார்டன் கிச்சன் புகைப்படம் :
* இல்லங்களில் பெண்களுக்கு பிடித்த இடம் மற்றும் அதிகம் பயன்படுத்தும் இடம் சமையல் அறை. அது அழகாக இருந்தால் பெண்களுக்கு இன்னும் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டு சமையல் அறையில் முறையான டைல்ஸ் மற்றும் அழகான கபோர்ட் வகை புகைப்படம் பொருத்தினால் சமையல் அறை அழகாக இருக்கும்.
பிரைட் வண்ணங்கள் புகைப்படம் :
* எண்ணங்களை பிரதிபலிக்கும் வல்லமை வண்ணங்களுக்கு இருப்பதால் வீட்டிற்கு நாம் பயன்படுத்தும் வண்ணங்களை தேர்வு செய்வதிலும் மார்டலிங் கலந்திருக்க வேண்டும் வீட்டின் வெளிப்புறத்தையும், உள்புறத்தையும் அழகாய் காட்டுவது நாம் தீட்டும் வண்ணங்களில்தான் உள்ளன. ஆகையால் பிரைட் வண்ணங்கள் புகைப்படம் மேலும் வீட்டை அழகுபடுத்தும்.
சுவரில் மாட்டக்கூடாத படங்கள் :
* ஆயுதங்கள் உள்ள படங்களை வீட்டில் மாட்டக்கூடாது.
* போரை சித்தரிக்கும் சிற்பங்கள் அல்லது புகைப்படங்கள்.
* பொம்மையில் பீரங்கியுள்ள புகைப்படங்கள்.
* முக்கியமாக பெருக்கல் குறி போல் வாள்களை வைக்கக்கூடாது.
* மான் தலையை கொம்புடன் இருப்பது போன்று வைக்கக்கூடாது.
* மிருகங்கள் வாயில் உணவை கவ்விக்கொண்டிருக்கும்படி இருக்கும் படங்களை வைக்கக் கூடாது.
* வீட்டின் வரவேற்பறையில் எந்தெந்த படங்களை மாட்டக்கூடாது தெரியுமா...?
* வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் படங்களை மாட்டுவதற்கு சில விதிகள் கூறப்பட்டிருக்கின்றன அவை என்ன என்பதை பார்ப்போம்.
* வீட்டில் கடவுளின் படங்களை மாட்ட சரியான இடங்கள் மற்றும் திசைகள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. போர், வன்முறை மிக்க காட்சிகளை கொண்ட படங்களை வீட்டின் எந்த ஒரு அறையிலும் மட்டாக்கூடாது.
* ரதத்திலிருக்கும் குருச்சேத்திர கிருஷ்ணன் அர்ஜூனன் படத்திற்கு பதிலாக, அர்ஜூனனுக்கு கிருஷ்ண பரமாத்மா காட்டிய விஸ்வரூப தரிசன காட்சி கொண்ட படத்தை வீட்டின் வரவேற்பறையில் மாட்டலாம்.
* வீட்டில் செல்வ பெருக பூஜையறையில் லட்சுமி, குபேரர் போன்றோரின் படங்களை வடக்கு திசையிலிருந்து தெற்கு திசை நோக்கி பார்த்தவாறு மாட்ட வேண்டும். வீட்டை துஷ்ட சக்திகள் அண்டாதிருக்க, சஞ்சீவி மலையை தூக்கியவாறு இருக்கும் ஆஞ்சநேயர் படத்தை தென் திசையை பார்த்தவாறு மாட்டலாம்.
* உக்கிர தோற்றத்தில் இருக்கும் துர்க்கை, காளி, நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் படங்களை வீட்டில் எங்கும் மாட்டக்கூடாது.
* புலி, சிங்கம் போன்ற விலங்குகள் பற்களை காட்டியவாறு, வேட்டையாடும் வகையில் இருக்கும் படங்களையும் மாட்டக்கூடாது. ஆனால் இவ்விலங்குகள் ஜோடியாக குட்டிகளோடு இருக்கும் படங்களை வீட்டின் கிழக்கு மற்றும் மேற்கு திசை பார்த்தவாறு மாட்டி வைக்கலாம்.
* கிருஷ்ண பரமாத்மா மற்றும் ராதை சேர்ந்திருக்கும் படங்களை வீட்டில் படுக்கையறையில் மட்டுமே மாட்டுவது நல்லது. இதனால் கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்நோன்யம் எப்போதும் நீடிக்கும்.
வீட்டுக்கு அழகு சேர்க்கும் வால்பேப்பர்... எந்த அறைக்கு ஒட்டலாம்?
* ஆசையாக ரசித்துக் கட்டிய வீட்டின் அவுட்லுக் என்பது அந்த வீட்டின் இன்டீரியர் டிசைனில் தான் இருக்கிறது. பெட்ரூமுக்கு கூல் கலர், ரிசப்சனுக்கு வார்ம் கலர், கிச்சனுக்கு நியான் கலர் எனப் பார்த்துப் பார்த்து வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவால். என்னதான் ரசனையுடன் வீட்டைக் கட்டியிருந்தாலும், சில சமயம் தவறான பெயிண்ட் செலக்ஷன், மொத்த அழகையும் கெடுத்துவிடும்.
* வீட்டில் ஒரே மாதிரியான வண்ணத்தையே பார்த்துப் பார்த்து போர் அடிக்கிறது என்பவர்கள், சுவரின் விரும்பும் இடங்களில் வால் ஆர்ட், தீம் வால் ஸ்டிக்கர், வால் டெக்ஸ்டர் மூலம் அலங்கரிப்பது லேட்டஸ்ட் டிரெண்டு. அதில், லேட்டஸ்ட் அப்டேட் சுவர் முழுவதுமோ அல்லது தேவையான இடங்களிலோ ஒட்டிக்கொள்ளும் வால் பேப்பர். இது, உங்கள் வீட்டை கலைநுட்பத்துடன் வண்ணமிட்ட தோரணையை அளிக்கும். உங்கள் வீட்டுக்கான சுவர் அலங்காரத் தேர்வு, பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் இங்கு காண்போம்.
வால் ஆர்ட் :
* வால் ஆர்ட் என்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் மியூரல் வேலைப்பாடுகளோ, வித்தியாசமான உருவத்தில் பெயிண்ட்டிங்கோ செய்து கொள்வது. இது அறையின் குறிப்பிட்ட இடத்தின் அழகை மெருகேற்றிக் காண்பிக்கும். இப்போதெல்லாம் நிறைய பெண்கள் வீட்டிலே மியூரல் வேலைப்பாடு, பெயிண்ட்டிங் கற்றுக்கொள்கின்றனர். அப்படி உங்களுக்கும் தனித்திறமை இருந்தால் நீங்களே வித்தியாசமாக ட்ரையல் மேற்கொள்ளலாம்.
வால் ஸ்டிக்கரிங் :
* வால் ஸ்டிக்கரிங் செய்ய விரும்புபவர்கள், குறைந்த பட்ஜெட்டில் செய்து கொள்ளலாம். ரெடிமேட்டாகக் கிடைக்கும் வால் ஸ்டிக்கர்களை ரசனைக்கு ஏற்ப தேர்வு செய்து வீட்டில் ஒட்டலாம். வால் ஸ்டிக்கர் உங்கள் சாய்ஸ் எனில் ஆன்லைனிலும் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது இன்டீரியர் டிசைனர்களின் உதவியை நாடலாம்.
* சுவர் முழுவதுமே கலைநயத்துடன் இருக்க வேண்டும் என்பவர்கள், வால் பேப்பர்களைத் தேர்வு செய்யலாம். இதில் ஓவன், நான் ஓவன், ஹேண்டு மேட் எனப் பல வகையான மெட்டீரியல்கள் கிடைக்கின்றன. வீட்டுக்கு கிளாசிக் லுக் விரும்புபவர்கள், நான் ஓவனைத் தேர்வு செய்யலாம். டிரெண்டி லுக் வேண்டும் என்பவர்கள், ஓவன் மெட்டீரியலைத் தேர்வு செய்யலாம். வித்தியாசமான லுக் விரும்புபவர்களுக்கு, ஹேண்ட்-மேட் மெட்டீரியல் பொருத்தமாக இருக்கும்.
வால் பேப்பர்கள் :
* வால் பேப்பர்களைப் பொறுத்தவரை, எந்த இடத்துக்கு எந்த டிசைனை, எந்த வடிவத்தில் தேர்வு செய்கிறோம் என்பதில் தான் இருக்கிறது அதன் அழகு. சிலர் வீட்டின் எல்லா அறைக்கும் வால் பேப்பர்களைப் பயன்படுத்த நினைப்பார்கள். இது தவறான ஐடியா. சில அறைகளுக்கு மட்டுமே பயன்படுத்தும்போதுதான் அதன் அழகை ரசிக்க முடியும். எல்லா அறைகளுக்கும் எனில், வீட்டின் அழகையே கெடுத்துவிடும்.
* பெட்ரூமுக்கு வால்பேப்பர் தேர்வு செய்வதாக இருந்தால், வெளிர் நிறங்களில் மாயத் தோற்றங்கள் நிறைந்தவற்றைத் தேர்வு செய்யலாம்.
* குழந்தையின் படிக்கும் அறைக்கு எனில், அவர்களைச் செயல்படத் தூண்டும் தன்னம்பிக்கையுடன் கூடிய படங்ளைத் தேர்வு செய்யலாம்.
* வரவேற்பறைக்கு எனில், கற்பனைத்திறனைத் தூண்டும் படங்கள் அழகூட்டும்.
* குழந்தைகளின் உறங்கும் அறைக்கு, கார்டூன், விளையாட்டுப் படங்கள் சூப்பராக இருக்கும்.
* சமையலறைக்கு எனில், மைல்டு கலரில் சீக்குவன்ஸ் டிசைன் கொண்டவை பெஸ்ட் சாய்ஸ்.
* இவை தவிர்த்து, குறிப்பிட்ட தீமிலும் உங்கள் அறைக்கான வால் போஸ்டரை வடிவமைத்துக்கொள்ளலாம். ஒரு வண்ணம், ஒரு டிசைன் கொண்ட சிங்கிள் டிசைன் போஸ்டர்கள், பல்வேறு வண்ணங்கள், வடிவங்கள் கொண்ட கொலாஜ்கள் என வால்பேப்பருக்கான வாசல்ss பரந்து விரிந்துள்ளது.
கருத்துகள் இல்லை