வீடுகட்டிய பின் - வீட்டை பராமரிக்கும் வழிமுறைகள் !!

                * கட்டமைப்புகளுக்கு வெயில் கால பராமரிப்புகள் ஒரு விதமாக இருக்கிறது என்றால், குளிர் காலத்திற்கான பராமரிப்புகள் வேறு விதமாக இருக்கிறது.

வெயில் கால பராமரிப்பு முறைகள் :

                 * கொளுத்தும் வெப்பத்தால் வீடு பாதிக்கப்படாமல் குளுகுளுவென இருக்க, பல்வேறு கட்டுமான உத்திகள் ஏராளமாக வந்துவிட்டன.

                 * வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இன்டீரியர் ஐடியாக்கள் நிறைய இருக்கின்றன. அப்படியிருக்கும் போது, சம்மர் சீஸனில் ஏசியை மட்டுமே நம்பி இருப்பது உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கும்.

                 * மெலிதான வண்ணங்களைப் பயன்படுத்துங்கள்!

                 * கோடைக்காலத்தில் வீட்டுக்குள் காற்று வரட்டும் என திரைச்சீலைகளை நீக்கிவிட்டு ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்காதீர்கள். இதனால் வீட்டுக்குள் அனல்காற்று அதிகரித்து, உஷ்ணத்தை உண்டாக்கும். மாறாக, அனல்காற்று வீட்டினுள் வராதவாறு சற்று வெளிர் நிற காட்டன் திரைச்சீலைகளைப் பயன்படுத்துங்கள். இதனால் அனல் வீட்டினுள் வராமல் இருக்கும்.

                 * வெயில் காலங்களுக்கு ஏற்ற பெயிண்ட்கள் இன்று கிடைக்கின்றன. வீட்டின் சூட்டை அதிகப்படுத்துவதில் மிக முக்கியப் பங்காற்றுபவை, வீட்டுக்கு அடிக்கும் வண்ணங்கள்.

                 * கோடைக்காலத்தில் உள்ளே அடிக்கும் வெளிர் நிறங்கள் தரும் மகத்துவத்தைப்போல, வீட்டின் வெளிப்புறத்துக்கு அடர்த்தியான வண்ணத்தைவிட மெலிதான வண்ணங்களே சிறந்தவை. மெலிதான வண்ணங்கள் சூட்டையும் வெளிச்சத்தையும் கிரகித்துக் கொள்ளாமல் பிரதிபலிக்கும்.

                 * முக்கியமாக மேற்கூரை மற்றும் பக்கச்சுவர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தும் வண்ணங்கள் ஐவரி, பிங்க், வெளிர் பச்சையாக இருந்தால், அது வீட்டுக்குள் குளிர்ந்த தன்மையை உண்டாக்கும் என்பது இன்டீரியர் டிசைனர்களின் அட்வைஸாக இருக்கிறது.

                 * இயற்கையாலான தடுப்புத் திரைகளான தென்னை ஓலை, பனை ஓலை, வெட்டிவேர் இவற்றால் செய்யப்பட்ட தடுப்புத் திரைகளை ஜன்னல்களில், பால்கனிகளில் தொங்க விடலாம். இவற்றால் வீட்டின் உள்பகுதி குளிர்ச்சியாகும். இவை வழக்கமான திரைச்சீலைகளைப்போல் அல்லாமல், பார்ப்பதற்கு ரிச் லுக் தருவதாக இருக்கும். அதனால் வீட்டின் இன்டீரியர் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் இருக்கும்.

                 * தனி வீடாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் மாடியில் நீரில் நனைத்த கோணிகளைப் பரப்பி வைக்கலாம். கோணிப்பைகள் தென்னை நார்களால் தயாரிக்கப்பட்டிருத்தால் நலம். இதன்மூலம் வீட்டின் உள்ளே சூடு இறங்குவது குறையும். அத்துடன், வீட்டின் மேல் மாடியில் தென்னங்கீற்றுகளால் கோடைகாலம் முடியும் வரை நிரந்தரமாக பந்தல் போட்டு வைக்கலாம். இப்படிச் செய்தால், மாடியின் தரையைக்கூட வெயிலால் தொட முடியாது.

                 * வீடு கட்டும்போதே, வெப்பம் இறங்காதபடி மேற்கூரைகளை அமைத்துக் கொள்வது வெயில் காலங்களில் மட்டுமல்ல, மற்ற சீஸன்களிலும் வெப்பம் வீட்டுக்குள் இறங்காமல் இருக்கும். வெப்பத்தைக் கடத்தாத வகையில் கற்களைப் பதிப்பது, கான்கிரீட் தளங்களை அமைத்த பிறகு, அதற்குமேல் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைப் பூசுவது என ஏராளமான கட்டுமான உத்திகள் வந்துவிட்டன.

மழைக்கால பராமரிப்பு முறைகள் :

                * மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே மழை நீர் வடிகால் குழாய் அடைப்பு மற்றும் மேல்மாடிகளில் தண்ணீர் தேங்கும் வகையில் இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

                * சன் ஷேடு மற்றும் போர்டிகோ ஆகியவற்றில் உள்ள மழைநீர் வடிகால் குழாய்களை பெரிய அளவாக இருக்கும்படி மாற்றி விடலாம்.

                * வீட்டின் கட்டுமான பணிகள் முடிந்தவுடன் சுவர் பூச்சு மற்றும் மேல்தள அமைப்பு ஆகியவற்றுக்கு ஒயிட் சிமெண்ட் போன்றவற்றால் பெயிண்ட் அடிக்கலாம். அதன் காரணமாக சுவரில் உள்ள சிறு துளைகள் அடைபட்டு விடும். பிறகு அதற்கு மேலாக எமல்ஷன் பிரைமர் இரண்டு முறைகள் அடிப்பது சிறப்பு.

                * ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை ரீ-பெயிண்டிங் செய்வதோடு, எக்ஸ்டீரியர் எமல்ஷன் ஒரு கோட் அடிப்பதும் கட்டிடத்தின் ஆயுளை அதிகமாக்கும்.

                * முதல் தளத்தில் அமைக்கப்படும் பாத்ரூம் சுவர்களில் கட்டாயமாக நீர்த்தடுப்பு பூச்சு செய்ய வேண்டும். இதனால் நீர்க்கசிவு பாதிப்புகள் தளத்தை பாதிக்காது.

                * இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சுவர்களில் விரிசல்கள் உள்ளதா..? என்று கவனிக்க வேண்டும். விரிசல்கள் இருப்பின் அவற்றை அக்ரிலிக் கிராக் பில்லர் கொண்டு தக்க முறையில் பட்டி பார்த்து, பெயிண்ட் அடித்து விடலாம்.

                * பாத்ரூம் டைல்ஸ் ஜாயின்ட்களில் சாதாரண ஜாயின்ட் பவுடர் மூலம் பேக்கிங் செய்யாமல் எபாக்சி ஜாயின்ட் பில்லர் மூலம் பேக்கிங் செய்வதுதான் சிறப்பானது.

                * பழைய கட்டிடத்தின் இணைப்பாக புதிய கட்டிடம் கட்டும்போது பொதுவாக உண்டாகும் ஜாயின்ட் விரிசல்கள் வராமல் தடுக்க வாட்டர் ப்ரூப் கெமிக்கல்களை பயன்படுத்தலாம். விரிசல்கள் ஏற்கனவே இருந்தால் சீலண்ட் கொண்டு பூசி அடைக்கலாம்.

                * கட்டிடத்தின் மேல் தளத்தில் பதிக்கப்பட்ட ஓடுகளின் ஜாயின்ட்கள் சரிவர அடைக்கப்பட்டுள்ளதா..? என்று மழைக்கு முன்னதாகவே பார்ப்பது அவசியம். சுவர்களில் பெயிண்டிங் செய்யும் போது ஓடுகளின் மேல் வாட்டர் புரூப் எக்ஸ்டீரியர் பெயிண்ட் செய்யலாம்.

                * வடிகால் நீர்க்குழாய்கள் 125 அடி அல்லது 150 அடிகளுக்கு ஒன்று என்ற அளவில் அமைப்பது நல்லது.

                * ஜன்னல் மற்றும் கதவு நிலைச்சட்டங்களில் ஏற்படும் விரிசல்களை சரி செய்ய சிலிகான் சீலண்ட் கொண்டு அடைக்கலாம்.

                * மேல்நிலை நீர்த்தொட்டியில் நீர்க்கசிவு இருப்பின் வாட்டர் ப்ரூப் கோட்டிங் தருவதன் மூலமாக சரி செய்யலாம்.

வீட்டை பராமரிக்கும் வழிமுறைகள் !!

கருத்துகள் இல்லை