வீடுகட்டிய பின் - ஒயரிங் செய்வது பற்றிய விவரங்கள் !!

                 * மின்சாரம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலையில்தான் உலகமே இயங்கிக்கொண்டு வருகிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மின்சாரத்தை வீடுகளில் பயன்படுத்த, மின்சாதன அமைப்புகளை பொருத்தும்போது, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கவனித்து செயல்படுவது அவசியம்.

                 * ஆல்டர்னேட்டிங் கரண்ட் (ஏ.சி) மற்றும் டைரக்ட் கரண்ட் (டி.சி) சர்க்யூட்கள் தனித்தனி ஒயரிங் அமைப்பாக இருக்க வேண்டும். டி.சி சர்க்யூட்டில் பாசிட்டிவ் மின்னோட்டத்தை குறிக்க சிவப்பு நிறத்திலும், நெகட்டிவ் மின்னோட்டத்தை குறிக்க கருப்பு நிறத்திலும் குறிப்பிட வேண்டும்.

                 * ஏ.சி மின் இணைப்பில் மூன்று பேஸ்களையும் முறையே, சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய கலர்கள் கொண்டு குறிப்பிடுவது முக்கியம். நியூட்ரல் கருப்பு நிறத்திலும், எர்த் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும்.

                 * 250 வோல்ட் அளவுக்கு மேல் மின்சார உபயோகம் இருக்கக்கூடிய சர்க்யூட் அமைப்புகளில் அபாயம் என்ற குறியீடு இருக்க வேண்டும்.

                 * லைட்டிங் அமைப்புக்கான சப்-சர்க்யூட் என்பது 10 பாயிண்டுகள், அல்லது 800 வாட்ஸ் லோடு கொண்டதாக இருக்க வேண்டும். பவர் சப்-சர்க்யூட்டில் 2 பாயிண்டுகள் அல்லது 3000 வாட்ஸ் லோடு வரை மட்டுமே இணைப்புகள் இருக்க வேண்டும்.

                 * மின்சாரத்திற்கான மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம் ஆகியவற்றை கச்சிதமாக கணக்கிட்டு அதற்கு தக்கவாறு மின்சார உபகரணங்கள் பொருத்தப்படுவது மிக அவசியம்.

                 * இரும்பு, செம்பு, அலுமினியம், ஈயம் போன்ற உலோகங்களால் உருவாக்கப்பட்ட அனைத்து விதமான ஒயரிங் உபகரணங்களையும் பூமியில் சரியான முறையில் எர்த்திங் செய்யப்பட்டிருப்பது முக்கியம்.

                 * எர்த் தொடர்பு கடத்தியில் சுவிட்ச் அல்லது பியூஸ் இணைப்புகள் வருவது கூடாது.

                 * பியூஸ் யூனிட் வழியாக செல்லக்கூடிய மின்னோட்ட அளவுக்கு தக்க பியூஸ் ஒயர் பொருத்தப்பட வேண்டும்.

                 * எல்லாவிதமான சப்-சர்க்யூட் அமைப்புகளும் டிஸ்ட்ரிபியூஷன் போர்டிலிருந்து தனித்தனி பியூஸ் கொண்டு இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

                 * பொதுவாக, அறைகளில் சுவிட்ச் போர்டு அமைக்கும்போது நுழைவாயிலுக்கு இடது பக்கமாக அமைப்பது வழக்கம். அப்போதுதான் வலது கை மூலம் சுவிட்ச் போட முடியும். மேலும், தரையிலிருந்து ஐந்தடி உயரத்தில் சுவிட்ச் போர்டு பொருத்துவது நல்லது.

                 * தரையிலிருந்து ஏழு அல்லது எட்டு அடி உயரத்தில் மின்விசிறி மற்றும் லைட் செட்டிங் இருப்பது போல பாயிண்டுகள் அமைக்கப்பட வேண்டும்.

                 * மின்சார மோட்டார் பொருத்தும்போது அதற்குரிய மெயின் சுவிட்ச், ஸ்டார்ட்டர் போன்றவை பயன்படுத்துவதற்கு ஏற்ற உயரத்தில் அமைக்கப்பட வேண்டும்.

                 * மீடியம் மற்றும் அதற்கு மேற்பட்ட வோல்டேஜ் அளவுகளில் இயக்கப்படும் எந்திரங்களுக்கு இரண்டு எர்த்கள் இணைப்பு தரப்படுவது முக்கியம்.

ஒயரிங் செய்வது பற்றிய விவரங்கள் !!

கருத்துகள் இல்லை