பொதுவான தகவல்கள் - மின் இணைப்பு பெறும் முறை

                 இன்றைய சூழ்நிலையில் மின்சாரம் இல்லாமல் இருப்பது சாத்தியமில்லாத ஒன்று. அனைத்திற்கும் மின்சாரம் அவசியமாகிறது. குடிநீர், ஒளி, தொலைக்காட்சி என அடிப்படை செயலுக்கும் மின்சாரம் தேவைப்படுகிறது. அத்தகைய மின்சார இணைப்பு என்பது 2 வகையாக உள்ளது.

அவை,

                  1. தற்காலிக மின் இணைப்பு

                  2. நிரந்தர மின் இணைப்பு

1. தற்காலிக மின் இணைப்பு

                 மின்சாரம் என்பது வீடு கட்டும் முன்பே தேவைப்படுகிறது. எனவே வீடு கட்டும் முன்னரே மின்சார இணைப்பு தேவைப்படும். அதாவது வீடு கட்ட தண்ணீர் தேவைப்படுவதால், நிலத்தில் ஆழ்த்துளை கிணறு அமைத்தோ அல்லது தண்ணீர் தொட்டியில் இருந்து தண்ணீர் பெற தற்காலிக மின் இணைப்பு தேவைப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தற்காலிக மின் இணைப்பைப் பெறலாம்.

                 தற்காலிக இணைப்புக்கு டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். தற்காலிக மின் இணைப்பு பெறுவோர், பணி முடிந்ததற்கான விபரத்தை, உதவி பொறியாளரிடம் தெரியப்படுத்த வேண்டும். உதவி பொறியாளர், இணைப்பு துண்டிக்கப்பட்டதை உறுதிபடுத்தியபின், கால தாமதம் செய்யாமல், பயன்படுத்திய மின்சாரத்திற்கு டெபாசிட் பணத்தில் கழித்துக்கொண்டு மீதி தொகையை வழங்குவர்.

2. நிரந்தர மின் இணைப்பு

                  வீடு கட்டி முடித்த பின் அனைத்து உபயோகத்திற்கும் மின் இணைப்பு பெறுவது அவசியம். அதன்படி நிரந்தர மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம்.

மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறை

                  தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் பிரிவு அலுவலகங்களில் மின் இணைப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கும். அந்த விண்ணப்பத்தை பூர்த்திசெய்து, அதை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

                * மின் இணைப்பிற்கு வீட்டின் உரிமையாளர் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு வீட்டு உரிமையாளராக விண்ணப்பிப்பவர் இல்லாவிடில், உரிமையாளரிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும்.

                * அதனுடன் வீடு, நிலம் போன்றவற்றின் பட்டா, பத்திரத்தின் நகல், வீட்டின் நிழற்பட அச்சுமுறை நகல் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.

                * மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பவர் வீடு கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெற வேண்டும்.

                * மேலும் வீட்டிற்கு ஒயரிங் வேலை முடிந்துவிட்டதை அரசு அனுமதி பெற்ற மின் பொறியாளர் உறுதிசெய்து, அவரிடம் ஒப்புதல் கடிதம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கட்டணம்

                 * தனி இணைப்பு (Single Phase) அல்லது மும்முனை இணைப்பு ( Three Phase) என தேர்ந்தெடுக்கும் இணைப்பை பொறுத்து கட்டணம் செலுத்த வேண்டும்.

                 * மேலும் இணைப்பு பெறும் மின் கம்பம் இல்லையென்றால், அதற்கான செலவும், அந்த கட்டணத்துடன் கணக்கிடப்படும். மேலும் மின்மாற்றியின் (transformer) திறனும் பரிசோதிக்கப்பட்டு, அதற்கேற்றவாறும் கட்டண தொகை கணக்கிடப்படும்.

                 * மேற்கண்ட அனைத்து வழிமுறைகள் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு, அவை சரியாக இருந்தால் 1 வாரம் அல்லது 30 நாட்களுக்குள் இணைப்பு கிடைத்துவிடும். மேலும் மின்மாற்றி (transformer) அமைக்க வேண்டி இருந்தால் 60-90 நாட்களில் மின் இணைப்பு கிடைக்கும்.

வீடுகள் கட்டும்போதும் கட்டிய பிறகும் மின் இணைப்பு பெறும் முறை

கருத்துகள் இல்லை