கடன் & அரசுத்திட்டங்கள் - பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் (மத்திய அரசு)

                 * வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் வீடு கட்ட வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை 2015 ஆண்டு அறிமுகப்படுத்தியது.

                 * இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரை மத்திய அரசு இலக்காகக் கொண்டிருக்கிறது.

விண்ணப்பிக்க தகுதி :

                * விண்ணப்பதாரரின் குடும்பத்திற்க்கு வேறெங்கும் சொந்த வீடு இருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்பத்திற்குச் சொந்த வீடு தொடர்பாக இந்திய அரசின் வேறெந்த திட்டத்தின் பயனும் கிடைத்திருக்கக் கூடாது.

                * திருமணமானவர்கள், தனியாகவோ அல்லது கணவன் மனைவி இணைந்தோ விண்ணப்பிக்கலாம். அவர்களில் ஒருவருக்கு மட்டுமே மானியம் கிடைக்கும்.

எங்கெல்லாம் வீடு கட்டலாம்?

                 * மாநகரம், நகரம், பேரூராட்சி, டவுன் பஞ்சாயத்து என இந்தியா முழுவதும் வீடு கட்டுபவர்களுக்கு/ புதிய வீடு வாங்குபவர்களுக்கு இந்த வட்டி மானியம் வழங்கப்படுகிறது.

                 * வீட்டுக்கான உரிமையில் குடும்பத்தலைவிக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டுமென்பதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தத் திட்டத்தின் விதிமுறைகள் இருக்கின்றன.

                 * வீட்டுக்கு உரிமையாளராகவோ அல்லது இணை உரிமையாளராகவோ குடும்பத்தலைவி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குடும்பத் தலைவரின் பெயரில் அந்த வீடு இருக்கும் பட்சத்தில், குடும்பத் தலைவியை துணை விண்ணப்பதாரராகவோ அல்லது உத்தரவாதம் அளிப்பவராகவோ காட்ட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம் (மத்திய அரசு) !!

கருத்துகள் இல்லை