கடன் & அரசுத்திட்டங்கள் - வீட்டு மனை வாங்க கடன் தரும் வங்கிகள் பற்றிய விவரங்கள்
வீடு வாங்க வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கடன்கள் வழங்குகின்றன. வீட்டு மனை வாங்குவதற்கும் வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் கடன் அளிக்குமா? இந்தக் கேள்வி பலருக்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். மனை வாங்குவதற்கும் வங்கிகளும் வீட்டு வசதி நிறுவனங்களும் கடன்கள் வழங்குகின்றன.
மனைக் கடன் வாங்க என்ன செய்ய வேண்டும்?
* பாரத ஸ்டேட் வங்க், இந்தியன் வங்கி மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. மேலும் தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகளிலும் வீட்டு மனை வாங்க கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
* இது வீட்டு கடனிலிருந்து மாறுபட்டவை ஏனென்றால் வீட்டு கடன்கள் உடனடியாக குடியேறும் வீடுகளை வாங்க மட்டுமே உதவுகின்றன. ஆனால் நிலம் வாங்க கடன் என்பது சொந்த வீடு என்ற கனவை ஒவ்வொரு விதத்திலும் நனவாக்க உதவுகிறது.
* நிலம் வாங்க கடன் என்பது உங்களுக்கான இரண்டு வழிகள் :
* மறு விற்பனை செய்யப்படும் வீட்டு மனையை நீங்கள் வாங்க திட்டமிட்டால்.
* நேரடி ஒதுக்கல் மூலம் ஒரு வீட்டு மனையை நீங்கள் வாங்க திட்டமிட்டால்.
* இந்த தனிப்பயனாக்கப்பட்ட பாதுகாப்பான கடனுக்கு விண்ணப்பித்து அதிகபட்ச சிறப்பம்சங்களையும் நன்மைகளையும் பெறுங்கள்.
* வீட்டு மனைகள் வாங்க என்று தனியாக வங்கிகள், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் என்று எதுவும் இல்லை. வீட்டுமனை வாங்கி, அதில் கண்டிப்பாக ஓராண்டுக்குள் வீடு கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் கடன் அளிக்கப்படுகிறது. நாம் வாங்க உள்ள வீட்டு மனையை அடமானமாகக் கொண்டுதான் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனை 24-36 மாதாந்திர தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். வீட்டு மனைக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 8-9 சதவிகிதமாக இருக்கிறது. இந்த வட்டி விகிதங்கள் மாறிக்கொண்டே இருக்கும். மேலும், வங்கிக்கு வங்கி மற்றும் கடன் விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதி வருமானம் தொழில் குறித்த நிபந்தனைகள் மாறுபட்டவையாக இருக்கின்றன.
மனை வாங்க... வங்கிக் கடன் வாங்குவதற்கான வழிகள்!
* மேலும், வங்கிகளில் மனை வாங்குவதற்கென வங்கிகள் சில விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் மனை வாங்கக் கடன் கிடைக்கும். வீட்டுக் கடனுக்குப் பார்க்கப்படுவதுபோலவே, கடன் பெற விண்ணப்பிப்பவரின் வருவாய், அவருக்குக் கடனை திரும்பச் செலுத்துவதற்கான தகுதி ஆகியவை மிக முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படும். மனையின் மொத்த விலையில் 60-75 சதவிகிதத்தை வங்கிகள் கடனாக வழங்கும். 25-40 சதவிகிதத் தொகையை நாம்தான் செலுத்த வேண்டியதிருக்கும்.
* மனைக் கடன் வாங்குவதற்கான தகுதி இருப்பின் விண்ணப்பித்தவரின் மனு வங்கியால் ஏற்றுக்கொள்ளப்படும். வீட்டுமனை வாங்கத் திட்டமிட்டுள்ள மனையில் வில்லங்கம் எதுவும் இருக்கக்கூடாது. வீட்டுமனை எந்த நிலத்தில் அமைந்துள்ளது என்பது குறித்து வங்கிகள் ஆய்வு செய்து கடன் வழங்குவது குறித்து முடிவு செய்யும்.
* மனை வாங்க விரும்பும் நபர், அரசு மற்றும் அரசால் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளின் அனுமதி பெறப்பட்ட வீட்டு மனைகளை வாங்கினால் மட்டுமே வங்கிகள் கடன் அளிக்கும். அரசு அங்கீகாரமில்லாத மனைகளை வாங்க வங்கிக் கடன் வழங்காது.
விவசாய நிலம்
* வீட்டுமனைகள் வாங்க வங்கிகள் கடன் வழங்குவதுபோல், விவசாய நிலம் வாங்கவும் வங்கிகள் கடன் வழங்குகின்றன. விவசாய நிலம் கடன் தொடர்பாக வங்கிகள் சில விதிமுறைகளை வகுத்துள்ளன. சிறு விவசாயிகள் நிலம் வாங்க கடன் வழங்கப்படுகின்றன. இதைத் தவிர விவசாய தொழிலாளர்கள், நிலத்தைக் குத்தகை எடுத்துள்ள விவசாயிகள், குறு விவசாயிகளும் நிலம் வாங்க வங்கிக் கடன் அளிக்கப்படுகிறது.
* மேலும், தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றுவதற்கும் வங்கிகள் கடன் உதவி வழங்குகின்றன. விவசாய நிலம் வாங்க நில மதிப்பில் 60-80 சதவிகிதம் கடனாக வழங்குகின்றன. 20-49 சதவிகிதம் விவசாயின் முதலீடாக இருக்கிறது.
* வங்கிக் கடன் அளவை நிர்ணயம் செய்ய, விவசாயி தெரிவித்துள்ள விலை, கடந்த ஐந்தாண்டுகளில் பதிவாளர்/ துணைப் பதிவாளர் அலுவலங்களில் பதிவுசெய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு, வாங்கத் திட்டமிட்டுள்ள நிலத்தின் தற்போதைய சந்தை விலை ஆகிவற்றில் எது குறைவாக இருக்கிறதோ, அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
* நிலத்தை அடமானமாகப் பெற்றுக் கொண்டுதான் வங்கிகள் விவசாய நிலக்கடன் வழங்கும். இந்தக் கடனை 7-12 ஆண்டுகளில் திரும்பிச் செலுத்த வேண்டும்.
நிலம் வாங்க இதோ ஒரு செக் லிஸ்ட் :
* குறைந்தது முப்பது வருடங்கள் வில்லங்க Certificate பார்க்க வேண்டும். இந்த முப்பது வருடங்களில் சொத்து யாரிடமிருந்து யாருக்கு மாறியது; மாறிய போது சரியான வாரிசு தாரர்களுக்கோ, உயில் எழுதிய நபருக்கோ சென்றதா போன்ற விபரங்கள் ஆய்ந்து அறியப்பட வேண்டும்.
* வில்லங்க பத்திரம் மட்டுமல்லாது மூல பத்திரங்களின் ஒரிஜினல் சரி பார்ப்பதன் மூலமே மேலே சொன்ன 'சொத்து சரியாக கை மாறியதா' என்பதை முழுதாக அறிய முடியும்.
* கட்டப்பட்ட வீடு எனில், அந்த பில்டிங் கட்டுவதற்கான அங்கீகாரம் பெறப்பட்டதா.. கட்டிடம் இல்லாத காலி மனை (ப்ளாட்) எனில், அங்கு மனை போட CMDA அல்லது DTCP அங்கீகாரம் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இந்த அங்கீகாரம் இருந்தால் தான் அதை 'அப்ரூவ்டு மனை' என சொல்ல முடியும். அப்போது தான் அந்த மனை வாங்க வங்கிகள் கடன் தரும். (அங்கீகாரம் பெறாத மனைக்கு சிட்டிபேன்க் போன்ற சில வங்கிகள் கடன் தருகின்றன. ஆயினும் அந்த கடன்கள் தனி நபரின் மதிப்பை வைத்து தான் தரப்படுகின்றன. அவர்கள் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளனர். பணம் தராமல் ஏமாற்ற மாட்டார் என்கிற எண்ணத்தில் தான் வங்கிகள் தருகின்றன. அதே நிலத்துக்கு சாதாரண ஆள் கடன் கேட்டால், அதே வங்கி தராது போகலாம் !.
* நீங்கள் வாங்க எண்ணும் இடத்துக்கான நில வரி அல்லது வீட்டு வரி கடந்த வருடங்களில் கட்டப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இதனை பார்ப்பதற்கு இரு காரணங்கள். ஒன்று யார் பெயரில் வீட்டு வரி கட்ட பட்டுள்ளதோ அவர் தான் வீட்டு ஓனர் என்பது அதன் மூலம் தெரிய வரும். அடுத்தது கடந்த சில வருடங்களில் அவர் வரி கட்டா விடில், சொத்து உங்கள் கைக்கு வந்த பின் அந்த வரிகளை நீங்கள் கட்ட நேரிடலாம். முக்கியமாய் சொத்தின் ஒனர்ஷிப்பை உறுதி செய்ய இந்த வரி ரசீதுகள் அவசியம். சிட்டா, அடங்கல் போன்றவையும் கூட வரி ரசீதுகள் தான். அவையும் சரி பார்த்தல் அவசியம்.
* சொத்தை விற்க பொது அதிகாரம் தரப்பட்டிருந்தால், அந்த பத்திரமும் அது தான் இறுதியான பத்திரமா என்றும் சரி பார்க்க பட வேண்டும். (பொது அதிகார பத்திரம் பற்றி தனியே விரிவாய் பார்க்கலாம்)சற்றே பெரிய காலி இடம் எனில் அந்த இடத்தில் பார்க் உள்ளிட்ட இடங்களுக்கு இடம் விடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். மேலும் பார்க்குக்கு ஒதுக்கிய இடத்தை உங்களுக்கு விற்க முயல்கின்றனரா என்றும் சரி பார்த்தல் அவசியம்.
* இடத்துக்கான கைடு லைன் வேல்யூ என்ன என்பதை பார்த்து அதன் அடிப்படையில் ( சொத்து விலையில் 8% ) ஸ்டாம்ப் பேப்பர் வாங்க வேண்டும். இப்படி ஸ்டாம்ப் பேப்பர் வாங்குவது அரசுக்கான வருமானம்.
* சொத்தை இன்னும் சில மாதங்கள் கழித்து தான் உங்கள் பெயரில் ரிஜிஸ்தர் செய்ய போகிறீர்கள், தற்போது அட்வான்ஸ் தான் தருகிறீர்கள் என்றால், எத்தனை நாளுக்குள் ரிஜிஸ்தர் செய்ய வேண்டும், பணம் எப்போது தரப்படும், முதலில் தரும் அட்வான்ஸ் எவ்வளவு என்பவை குறிப்பிட்டு ஒரு அக்ரிமென்ட் போட்டு கொள்தல் நல்லது. மிக எச்சரிக்கையான சிலர் இந்த அக்ரிமென்ட்டையும் பத்திர அலுவலகத்தில் ரிஜிஸ்தர் செய்து விடுவார்கள்.. அப்போது தான் அதற்கு ஒரு பைண்டிங் போர்ஸ் வரும் என்பதால் நிலத்துக்கான பட்டா வாங்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். பட்டாவும் நிலத்தின் உரிமையை நிர்ணயிக்கும் தாக்கீது தான்.
* இவை அனைத்தும் சரி பார்ப்பதன் முக்கிய நோக்கம் நிலத்தின் உரிமையாளர் யார் என்று பார்த்து அவர் தான் உங்களுக்கு விற்கிறாரா, அதை விற்க அவருக்கு உரிமை உள்ளதா என நிர்ணயிக்க தான்.உரிமையாளர் தான் உங்களுக்கு விற்கிறாரா என அனைத்து விதத்திலும் உறுதி செய்த பின் தான் அந்த இடம் வாங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
* இதுவரை படித்ததில் ஒரு விஷயம் உங்களுக்கு புரிந்திருக்கும். இது மிக டெக்னிகல் ஆன விஷயம். இத்தனை விஷயங்களை சாதாரண மக்களால் படித்து புரிந்து கொள்ள முடியாது. சொத்து விஷயங்களை டீல் செய்யும் வழக்கறிஞராக பார்த்து அவரிடம் இந்த விஷயங்களை சரி பார்த்த பிறகே நிலம் வாங்க முடிவெடுப்பதே நல்லது.
* பல லட்சங்கள் செலவு செய்து ஒரு சொத்து வாங்கும் போது சில ஆயிரம் வழக்கறிஞருக்கு செலவு செய்து அதில் வில்லங்கம் இருக்கிறதா என பார்த்து விடுவது நிம்மதியாக இருக்க உதவும் !
கருத்துகள் இல்லை