தேமல் மறைய
புளித்த தயிருடன் முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் பழுத்த பப்பாளிப் பழம் ஆகிய மூன்றையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அதை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளி, தேமல், பரு ஆகியவை மறையும்.
கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை போக்க
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால், அது சருமத்திற்கு மிகவும் சிறந்தது.
ஆகவே பாதாம் எண்ணெயுடன், தேன், மில்க் க்ரீம், ஓட்ஸ் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில், தினமும் இரவில் படுக்கும் முன் தடவி, காலையில் கழுவ வேண்டும்.
இதனை தொடர்ச்சியாக செய்தால், கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்கலாம்.
கண் எரிச்சல் போக
தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கல் உப்பைக் கலக்கி, அடிக்கடி கண்களை அலம்பி வந்தால் நேச்சுரல் மாய்சரைஸராகச் செயல்பட்டு, கண்கள் உயிர்ப்புடன் மின்னுவதுடன், கண் எரிச்சலும் காணாமல் போகும்.
கருத்துகள் இல்லை