சரும வறட்சி அகல
ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தைப் போட்டு மசித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
அதைத் தொடர்ந்து சருமத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
இந்த பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த, சரும வறட்சி அகலும்.
முக வறட்சி நீங்க
கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வந்தால் முக வறட்சி நீங்கும்.
கருவளையம் மறைய
வெள்ளரிக்காய் விதையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள்.
இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.
கருத்துகள் இல்லை