எண்ணெய் பிசுக்கு நீங்க
ஒரு டீஸ்பூன் முல்தானி மட்டி ஒரு டீஸ்பூன் சந்தன பொடி மற்றும் பன்னீருடன் கலந்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட் கெட்டியாகவும் இருக்க கூடாது, நீராகவும் இருக்க கூடாது.
அதனால் அதற்கேற்ப அளவில் பன்னீரை சேர்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி கொண்டு, 20-30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள்.
பின் சாதாரண நீரில் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.
எண்ணெய் பசையைப் போக்க
நாட்டுச் சர்க்கரை - 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் இந்த இரண்டு பொருட்களையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அந்த கலவையை முகத்தில் தடவி, சில நிமிடங்கள் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.
பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இந்த ஸ்கரப் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்குவதோடு, சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்திக் காட்டும்.
எண்ணெய் பசை நீங்க
கடலை மாவை சீமைச்சாமந்தி டீ சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
இந்த மாஸ்க்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.
எண்ணெய் பசை நீங்க
முட்டையின் வெள்ளைக்கரு 7 ஸ்பூன், மாதுளை ஜூஸ் அரை ஸ்பூன், தேன் மூன்றையும் கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் பசை நீங்கிவிடும்.
கருத்துகள் இல்லை