* வெண்டைக்காய் பருத்திச் செடியின் குடும்பத்தை சேர்ந்தது.
* தாவரவியல்படி செம்பருத்தி ஹாலிஹாக் என்னும் பூச்செடி வகை. இந்த பூக்களின் அமைப்பும், வெண்டைக்காய் பூவின் அமைப்பும் ஒரே மாதிரியானவை.
* வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோர நாடுகள், பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகியது.
* கி.பி 1600களில் அடிமை வியாபாரம் தொடங்கிய காலகட்டத்தில் ஆப்பிரிக்கர்கள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
* வெண்டைக்காய்க்கு வெப்பம் அதிகமுள்ள நிலமும், பகல் மற்றும் இரவு இரண்டிலும் சூடான சூழ்நிலையும் அவசியம்.
* இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் விளைச்சல் அதிகம்.
* இளசாக இருக்கும் வெண்டை வெண்மையாகவும், நீளமாகவும், நுனி கூராகவும் இருப்பதால் ஆங்கிலத்தில் இதை பெண்ணின் விரல் என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை