* கண்ணாடி பாட்டில்களுக்கு மாற்றாக வந்திருப்பவைதான் பெட் பாட்டில்கள். கண்ணாடி பாட்டில்களைவிடக் கூடுதல் பாதுகாப்பும், காற்றழுத்தத்தைத் தாங்கக்கூடிய தன்மையும் கொண்டவை இந்த பெட் பாட்டில்கள். ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடலாம் அல்லது இந்தப் பாட்டில்களை மறுசுழற்சி செய்யலாம் என்பதால் பெட் பாட்டில் தயாரிக்கும் தொழிலுக்கு நிறைய வரவேற்பு உள்ளது .

                 * மருந்து மற்றும் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவை அடைத்து விற்பதற்கும், ஊறுகாய், பினாயில் போன்றவை அடைப்பதற்கும் ஏற்ற சின்னச் சின்னப் பாட்டில்கள் விற்பனைக்கான வாய்ப்புகளாக உள்ளன. எந்தப் பகுதியிலும் இந்தத் தொழிலை தொடங்கலாம் என்பது இதிலிருக்கும் கூடுதல் சிறப்பு.

                * பெட் என்பது கிரானுவல் டைப்பில் வரும். இதை இன்ஜெக்க்ஷன் மோல்டிங் என்கிற முறையில் பிரீஃபார்ம் என்கிற சிறிய பாட்டில்களாகத் தயாரிப்பார்கள். இது சிறிய காற்று அடைக்கப்பட்ட பலூன்போல இருக்கும். இதுதான் பெட் பாட்டில் தயாரிப்பின் மூலப்பொருள்.

               * பெட் பாட்டில் தயாரிக்க அந்த இயந்திரங்களில் பொருத்துவதற்குத் தேவையான அளவு அச்சுக்களை இணைக்க வேண்டும். இந்த இயந்திரத்துடன் காற்று அழுத்தம் உள்ள கம்ப்ரஸர் இணைப்பு வேண்டும்.

                * இந்த பிரீஃபார்ம் பாட்டில்களை இயந்திரத்தில் பொருத்தி அழுத்தமான வெப்பக் காற்றை உட்செலுத்தினால், சிறிய பாட்டில் போன்ற வடிவம் விரிவடைந்து, நாம் பொருத்தி உள்ள அச்சின் வடிவம் பெற்று பாட்டில்களாக மாறும். அவற்றை வெளியே எடுத்து குளிர்வித்து, அதற்கான மூடியை இணைத்து விற்பனைக்கு அனுப்பலாம்.

                * பொதுவாக, பெட் பாட்டிலுக்கான பிரீஃபார்ம் விற்பனை செய்பவர்களே பெட் பாட்டில் மூடியையும் தயாரித்துத் தருவார்கள். நாம் மூடியுடனோ அல்லது மூடியில்லாமலோ விற்பனை செய்யலாம்.

பெட் பாட்டில் தயாரிப்பு முறை

கருத்துகள் இல்லை