குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவர்களின் விருப்பத்திற்கேற்ற டிசைன்களில் உடைகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு பிடித்த கார்டூன் பொம்மை மற்றும் பெரியவர்களுக்கு பிடித்த வாக்கியங்களில் டி-சர்ட்டுகள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த மாதிரியான டி-சர்ட் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலை நாம் வீட்டில் இருந்தபடியே குறைந்த முதலீட்டில் மிகவும் எளிமையாக செய்து அதிகப்படியான வருமானம் பெற முடியும்.

தேவையான பொருட்கள் :

                         * ஸ்கிரீன் பிரிண்டிங் ப்ரேம் (Screen Printing Frame)

                         * ட்ரேசிங் சீட் (Tracing Sheet)

                         * வாட்டர் பேஸ்டு இங்க் (Water Based Ink)

                         * ஸ்கியூசர் (Squeezer)

                         * டி-சர்ட் (T - Shirt)

                         * புக் அட்டை (Cardboard)

                         * டேபிள் (Table)

ஸ்கிரீன் பிரிண்டிங் ப்ரேம் செய்முறை :

                  * மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஸ்கிரீன் சப்ளை ஸ்டோரில் நாம் வாங்கிக் கொள்ளலாம்.

                  * இந்த ஸ்கிரீன் பிரிண்டிங் செய்வதற்கு Photoshop மற்றும் Coraldraw பற்றிய அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.

                  * முதலில் இந்த Photoshop மற்றும் Coraldraw - வை பயன்படுத்தி தேவையான டிசைன் ஒன்றை உருவாக்க வேண்டும். அந்த டிசைனை png அல்லது pst Format - ல் சேமிப்பு (Save) செய்ய வேண்டும்.

                  * பிறகு அந்த டிசைனை விசிட்டிங் கார்டு பிரிண்ட் செய்யும் கடையில் கொடுத்து ட்ரேசிங் சீட்டில் (Tracing Sheet) பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

                   * இப்பொழுது அந்த பிரிண்ட் எடுத்த ட்ரேசிங் சீட்டை ஸ்கிரீன் சப்ளை ஸ்டோரில் கொடுத்து ப்ரேம் செய்ய சொல்ல வேண்டும். இப்போது ப்ரேம் ரெடி.

டி-சர்ட் ஸ்கிரீன் பிரிண்டிங் செய்முறை :

                 * பிரிண்ட் செய்ய வேண்டிய டி-சர்ட்டை முதலில் சுருக்கம் இல்லாமல் ஒரு டேபிள் மீது வைக்க வேண்டும். டி- சர்ட்டின் இரு பக்கங்களுக்கு நடுவில் ஒரு அட்டை வைக்க வேண்டும்.

                 * இப்போது டி-சர்ட்டின் முன்பக்கம் ப்ரேமை வைத்து அதில் தேவையான நிறத்தில் வாட்டர் பேஸ்டு இங்க் சிறிது போட வேண்டும். இந்த இங்கை ஸ்கியூசர் கொண்டு இரண்டு, மூன்று முறை அழுத்தி தேய்க்க வேண்டும்.

                 * பின்பு, மெதுவாக அந்த ப்ரேமை எடுத்து விட வேண்டும். இப்போது நமக்கு தேவையான டிசைனில் டி-சர்ட் ரெடி.

(குறிப்பு : வாட்டர் பேஸ்டு இங்கை காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைக்க வேண்டும். மேலும், ஸ்கிரீன் பிரிண்டிங் ப்ரேமை உபயோகப்படுத்தியவுடன் சுத்தம் செய்ய வேண்டும்.)

விற்பனை முறை :

                   நாம் தயார் செய்த டி-சர்ட்டுகளை ஆன்லைனில் ஒரு வெப்சைட் உருவாக்கி அதன் மூலம் விற்பனை செய்யலாம். மேலும், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு ஆர்டரின் பெயரில் தயார் செய்து கொடுப்பதன் மூலம் அதிகப்படியான இலாபம் பெற முடியும்.

டி-சர்ட் ஸ்கிரீன் பிரிண்டிங் முறை

கருத்துகள் இல்லை