மண்ணாலான பூந்தொட்டிகளை நாம் அனைவரும் பயன்படுத்தி இருக்கின்றோம். ஆனால், அதில் சற்றே வித்தியாசமாய் அலங்கரித்த பூந்தொட்டிகள் இப்போது கடைகளில் விற்பனைக்கு வருவதையும் நாம் அனைவரும் அறிந்திருப்போம். இந்த அலங்கரித்த பூந்தொட்டிகள் வீடுகளை அலங்கரிக்கவும், திருமணம் போன்ற விழாக்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட சாதாரண மண்ணாலான தொட்டிகளை குறைவான முதலீட்டில் வீட்டிலேயே சுலபமாக அலங்கரித்து விற்பதன் மூலம் நாமும் அதிகப்படியான இலாபம் அடைய முடியும்.

தேவையான பொருட்கள் :

                          * பூந்தொட்டி

                          * சாண்டிங் பேப்பர் (உப்பு காகிதம்)

                          * டெக்சர் ஒயிட்

                          * ஃபேப்ரிக் கலர் பிரவுன்

                          * வட்ட அல்லது சதுர வடிவ கண்ணாடி துண்டுகள்

                          * பாக்கெட்பால் கவர்

                          * கத்தரிக்கோல்

                          * பிரஸ்

செய்முறை :

                       * முதலில் மண்தொட்டியை நன்கு துடைத்து அதன் மேல் உள்ள சொரசொரப்பு நீங்குவதற்கு உப்பு காகிதம் கொண்டு அதனை தேய்க்க வேண்டும். பிறகு பிரஸ் கொண்டு ஃபேப்ரிக் கலரை அந்த தொட்டியின் வெளிப்பக்கம் முழுவதிலும் அடித்து நன்கு காய விட வேண்டும்.

                       * அடுத்து நம்மிடம் உள்ள ஸ்டோன்ஸ் அல்லது கண்ணாடி துண்டுகளை தேவையான இடத்தில் ஒட்ட வேண்டும்.

                       * ஓவியம் வரைய தெரிந்தவர்கள் விருப்பமான ஓவியங்களையும் இதில் வரையலாம்.

                       * பின்பு, நன்கு உலர்ந்த பால் பாக்கட்டுகளை மெஹந்தி கோன் போல் செய்து அதில் டெக்சர் ஒயிட்டை ஊற்றி நன்கு இறுக்கமாக கட்டிக்கொண்டு கீழுள்ள கூர்மையான முனையை சிறிது கத்தரித்து கண்ணாடி துண்டுகள் ஒட்டிய இடத்தில் விருப்பமான டிசைன்களில் அலங்கரிக்கவும். டெக்சர் ஒயிட்டுக்கு பதிலாக விருப்பமான ஃபேப்ரிக் கலரும் பயன்படுத்தலாம்.

                      * ஒவ்வொருவரின் கற்பனை திறனுக்கும் ஏற்ப பல டிசைன்களில் இந்த தொட்டிகளை வடிவமைக்கலாம். இப்போது, இதனை நன்கு உலர விட்டு பிறகு விற்பனைக்கு அனுப்பலாம்.

விற்பனை முறை :

                       அருகில் உள்ள சிறிய மற்றும் பெரிய கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பலாம். மேலும், ஆர்டரின் பேரில் பல்பொருள் அங்காடிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி மகத்தான இலாபம் அடைய முடியும்.

பூந்தொட்டி ஓவியம் செய்முறை

கருத்துகள் இல்லை