நம்மை பிறர் மதிப்பீடு செய்வதில் வீட்டின் முன்பகுதி பெரும்பங்கு வகிக்கின்றது. விலை உயர்ந்த சோபாக்கள், கம்பளங்கள், சாண்டிலியர்கள், ஓவியங்கள் போன்றவற்றை அடுக்கி அழகு படுத்த வேண்டுமென்பதில்லை. இருப்பதை சுத்தமாக வைத்து இருந்தாலே போதும்.
தூசிகள் இல்லாத சோபா, சோபாவுக்கு அடியில் குப்பைகள் தேங்காத நிலை, தொலைக்காட்சி பெட்டி இருக்கும் அலமாரியில் பொருட்களை ஒழுங்கின்றி வைத்திருக்கமால் நேர்த்தியாக அடுக்கி வைத்தல், அன்றைய தினசரியைத்தவிர மற்ற பழைய பேப்பர்களை பிறர் கண்களுக்கு படாமல் மறைவான இடத்தில் வைத்தல், தினசரி மற்றும் புதிய பத்திரிகைகள் போன்றவற்றை நேர்த்தியாக அடுக்கி வைத்தல், மாதம் ஒரு முறை துவைத்து மாற்றிய கார்ட்டைன்கள், விளக்குகள் மின்விசிறி போன்றவற்றை துணியினால் 10 நாட்களுக்கு ஒரு முறையாவது துடைத்து சுத்தப்படுத்துதல் போன்றவற்றில் உறுதியாக இருங்கள்.
உங்கள் பொருளாதர வசதிக்கு ஏற்ற படி படங்கள், பூங்கொத்துக்கள் போன்றவற்றை மாட்டினால் கூடுதல் அழகாக இருக்கும்.
கருத்துகள் இல்லை