உலகின் தற்காப்பு கலைகளின் வேர் எங்கிருந்து ஆரம்பித்தது என்ற ஆராய்ச்சிகளின் முடிவுகள் போதிதர்மன் என்ற பெயரில் போய் முடிகிறது.
ஆம், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த புத்தமதத்தைச் சார்ந்த பல்லவ மன்னன் போதிதர்மன் தான் முதல்முறையாக எதிரிகளிடம் இருந்து ஆயுதமில்லா நிலையில் தனி மனிதன் ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சண்டையிடும் புதிய முறையை உருவாக்க முயன்றார்.
அப்போது தமிழரின் பாரம்பரிய தற்காப்பு கலையான வர்மக்கலையை அடிபடையாகக் கொண்டும், விலங்குகள் மற்றும் பறவகைகள் சண்டையிடும் அசைவுகளை மனிதனின் அசைவுகளுடன் இணைத்தும் புதிய முழுமையடையா தற்காப்பு மற்றும் சண்டையிடும் முறையை உருவாக்கினார். இதுவே உலகின் அனைத்துத் தற்காப்பு கலைகளின் அடிப்படையாகக் கருதப்படுகிறது.
மேலும் கலையை மேம்படுத்தும் நோக்கில் தன் அரசை சார்ந்த 1000-க்கும் மேற்பட்டவர்களை வைத்து மனித உடலை முடக்கும் அல்லது உயிரை எடுக்கும் பலவீனமான நிலைகளை (Point), வர்மத்தை பயன்படுத்தித் தாக்கும் வழிமுறைகளை ஆராய்ச்சி செய்தார்.
நீண்ட ஆராய்சிக்கு பின்பு அதில் வெற்றியும் கண்டார். தான் உருவாக்கிய புதிய கலையைக் கொண்டு எதிரியின் உடலில் ஒரு சில இடங்களில் ஊசியால் குத்துவது போன்று ஓங்கி அடிக்கும்போது எதிரியை நிலைதடுமாறச் செய்யவோ, உடல் இயக்கத்தை முடக்கவோ அல்லது உயிரையே எடுக்கவோ முடியும் என்று கண்டறிந்தார்.
இந்த நுட்பங்களைக் கொண்டுதான் உலகின் முதல் ஆயுதமில்லா போர்க்கலையை (Weaponless Fighting Art) மற்றும் மேம்படுத்தப்பட்ட தற்காப்புகலையை (Martial Art) உருவாக்கினார்.
தன் குரு ப்ரக்யதாராவின் கட்டளையை ஏற்றுப் புத்தமதத்திற்குத் தொண்டு செய்யும் நோக்கில் சீனா சென்ற அவர், மன்னர் 'வூ-டி'யை சந்தித்த பிறகு யாங்க்ஸி நதியைக் கடந்து ஹெனான் பகுதியின் மலைச் சிகரங்களில் உள்ள ஷாவொலின் மடலாயத்திற்கு வந்து சேர்ந்தார்.
அங்கேயே தன் சேவைகளைத் தொடங்கிய அவர் மனம் மற்றும் தேகத்தில் சோர்வுற்ற நிலையில் இருந்த புத்த துறவிகளுக்கு முதலில் தான் உருவாக்கிய ஆயுதமில்லா சண்டை மற்றும் தற்காப்பு கலையைக் கற்றுகொடுக்கிறார்.
அதாவது முறையான உடற்பயிற்சி மூலம் துறவிகளின் மனம் மற்றும் தேகத்தைத் திடப்படுத்துவது தான் பயிற்சியின் அடிப்படை தத்துவமாகும். அவ்வாறு அவர்களுக்குக் கற்றுகொடுக்கபட்ட கலை தான் குத்துசன்டையின் (Boxing) ஷாவொலின் அலகு (Style) என்று அழைக்கப்படுகிறது.
போதிதர்மர் பயிற்றுவித்த நுட்பம் தான் சீனர்களின் அனைத்துத் தற்காப்பு கலைகளுக்கும் சாரம்சமாக அமைந்துள்ளது. இந்த வகையில் பார்க்கும்போது கராத்தே எனும் தற்காப்பு கலை ஜப்பானின் அக்கினவா (Okinawa) தீபகற்பத்தில் தோன்றுவதற்கு முன்பே சீனாவில் தோன்றியது எனச் சொல்வது சரியாக இருக்கும்.
ஜப்பான், சீனா மற்றும் தைவான் ஆகிய மூன்று நாடுகளின் வர்த்தக மையமாக அக்கினவா திகழ்ந்துள்ளது. அதுமிட்டுமின்றி இந்தியா, மலேசியா, தாய்லாந்து, புருனே மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் ஜப்பானுடனான தங்களின் வர்த்தகத்தை அக்கினவா தீவு வழியாகவே நடத்திவந்தன.
அப்பகுதியில் வாழ்ந்து வந்த ஜப்பான் வணிகர்கள், கொள்ளைக்காரகளிடம் இருந்து தங்கள் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்ள அக்கினவா பகுதியில் வாழ்ந்து வந்த சோலைன் மட புத்த துறவிகளிடம் இருந்து தற்காப்பு கலைகள் மற்றும் ஆயுதமில்லா சண்டைக் கலைகளைக் கற்றுகொண்டனர்.
கருத்துகள் இல்லை