கராத்தே என்றால் வெறும் கைப் பயிற்சி என்று பொருள்படும். கராத்தே என்ற சொல்லை KAH-RAH-TEH என உச்சரிக்க வேண்டும். இந்த சொல்லை கராட்டே என்று உச்சரிப்பது தவறானது.
கராத்தே என்பது வெறும் கை, கால்கள், முழங்கால், முழங்கை, மண்டை, தோள் போன்ற பல பாகங்கள் மூலமாக எதிரிகளைத்தாக்கி வெற்றி காணும் ஓர் உன்னதக் கலை ஆகும்.
எதிரிகள் ஆயுதங்களை வைத்திருந்தாலும், இந்த கலையைக் கற்றவர்கள் வெறும் கை, கால்களால் தாக்கி வெற்றி கொள்ளலாம்.
மேலும் இந்த கலை மனோ சக்தியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. கையை மட்டும் முதன்மையாகக் கொண்டு இக்கலை விளங்குவதால் இதனை டே (Te) அல்லது கர(Kara) என்ற பெயர் கொண்டு அழைத்தனர்.
தமிழில் கை என்பதற்குக் கரம் (Karam) என்றும், தாக்குவதை அடி (Strike) என்றும் சொல்லலாம். அதாவது கராத்தே என்றால் கையால் தாக்குவது என்று தமிழில் சொல்லலாம்.
இந்த இரண்டு தமிழ் சொற்களையும் பயன்படுத்தி தான் சீனர்கள் கர(Kara) என்றும் டி(Te) என்றும் அக்கலையை அழைக்கின்றனர்.
கரம் > கர (Kara) என்று மருவி உள்ளது.
அடி > டி (Te) என்று மருவி உள்ளது.
கருத்துகள் இல்லை