அநேகமாக எல்லா படுக்கை அறைகளிலும் இருக்கும். ஆறுமாதத்திற்கு ஒரு முறையாவது உள்ளே இருக்கும் பொருட்கள் அனைத்தையும் எடுத்து நன்கு துணியால் துடைத்து பேப்பர் மாற்றுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
அநேக வீடுகளில் நியூஸ்பேப்பரை அலமாரிகள் தட்டுகளுக்கு விரித்து பொருட்களை அடுக்குவார்கள். இந்த முறை கனமான சார்ட் பேப்பர், அல்லது பிரவுன் ஷீட்டை விரித்துப்பாருங்கள். இனி அந்த பழக்கத்தை விடவே மாட்டீர்கள்.
அழகாக இடைவெளி விட்டு அடுக்கி, நாப்தலின் பால்களை ஆங்காங்கே வைத்து, துணிகளையும் மற்ற பொருட்களையும் தனித்தனி அடுக்குகளில் வைத்து, தேடும் போது உடனே கிடைக்கும் படியாக அமைத்துக்கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை