படிக்கும் அறையில் புத்தக அலமாரியில் பொருட்களை அளவுக்கு அதிகமாக அடுக்கி, நேர்த்தி இல்லாமல் இருந்தால் பிள்ளைகளுக்கு படிக்கும் எண்ணம் இல்லாமல் போய் விடும்.
மேசை மீது ஓரத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு வேலை செய்வதற்கு ஏற்றவாறு இடம் ஒதுக்கி இருக்க வேண்டும்.
பேனா, பென்சில்களுக்கு ஸ்டாண்ட், பேப்பர் மற்றும் குப்பைகளை போட சிறிய குப்பைத் தொட்டி என்று வைத்து குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தை வலியுறுத்துங்கள்.
எந்தெந்த பொருட்கள் எங்கெங்கே இருக்கின்றது என்று தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும் டக் என்று சொல்லும் அளவு பிள்ளைகளை நாம் சீர்படுத்தினால் அவர்களின் சிந்தனையும் தெளிவாக அவர்களை நேர்வழிப்படுத்தும்.
கருத்துகள் இல்லை