என்றாவது ஒரு நாள் தேவைப்படும் என்று பொருட்களைச் சேகரிக்காதீர்கள்.
ஒரு பொருளை ஒரு மாதத்துக்கு ஒரு முறையேனும் நாம் உபயோகிக்கவில்லையெனின் அதன் பயன்பாடு நமக்குத் தேவையில்லை என்றே அர்த்தம். அதைத் தூர வீசிவிடலாம்.
மனமில்லை எனின் அட்டைப்பெட்டியில் போட்டு லாஃப்ட் என்னும் பரணில் வைத்துவிட்டு தேவையான நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
இதிலும் கசகச வென்று சாமான்கள் அடைத்து வைக்காமல் பெரிய அட்டைப்பெட்டிகளில் கட்டி உள்ளே என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்னும் லிஸ்டை ஒரு பேப்பரில் எழுதி அட்டை பெட்டி மேல் ஒட்டி, பரணில் அடுக்கி வைத்தால் எடுப்பதற்கு சுலபமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.
கருத்துகள் இல்லை