வர்மக்ககலை நான்கு வகைப்படும். அவை
தொடு வர்மம்:
இது பலமாக தாக்கப்படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குணப்படுத்த முடியும்.
தட்டு வர்மம்:
இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி, தாக்கப்படுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும். ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தாக்கப்படுபவரை இதற்கு உரிய தனி சிகிச்சை முறையில் மட்டுமே குணப்படுத்த முடியும்.
நோக்கு வர்மம்:
பார்வையை ஒரே இடத்தில் செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் இவ்வுலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்.
படு வர்மம் :
நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுதான். உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்மம் ஆகும். இத்தாக்குதலுக்கு உள்ளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.
ஒரு மனிதனின் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்றும், வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாகும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இதனை செய்ய முடியும்.
கருத்துகள் இல்லை