தேவையான பொருட்கள் :
* மசாலா வடை 10
* வெங்காயம்1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய்2
* மல்லி தூள் அரை டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
* துருவிய தேங்காய் அரை கப்
* சோம்பு அரை டீஸ்பூன்
* முந்திரி 5
* இஞ்சி அரை டீஸ்பூன்
* கிராம்பு 2
* மிளகு கால் டீஸ்பூன்
* கறிவேப்பிலை 1 கொத்து
* உப்பு தேவைக்கேற்ப
* எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு மற்றும் முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி, பின் இஞ்சி சேர்த்து வதக்கி இறக்கி, ஆற வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, கிராம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும்.
அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
அடுத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மசாலா வடைகளைப் போட்டு, குழம்பில் வடை நன்கு ஊறியதும், அதனை இறக்கவும்.
கருத்துகள் இல்லை