* மரத்தின் பெயர் : எட்டி மரம்

            * தாவரவியல் பெயர் : ஸ்டிக்னஸ் நக்ஸ்வாமிகா

            * ஆங்கில பெயர் : Nux Vomica Tree, Poison Nut Tree

            * தாயகம் : இந்தியா

            * மண் வகை : அனைத்து வகையான மண்ணிலும் வளரும் மரம்

            * தாவர குடும்பம் : லோகனியேசி

            * மற்ற பெயர்கள் : கசோடி, காலம், காஞ்சிரை, நக்ஸ் வாமிகா, பாய்சன் நட், ஸ்ட்ரிக்னைன் ட்ரீ, குச்சிலா, பெய்லிவா, சிப்பிஞ், ஐகார், கஜ்ரா, குச்லா, சாம்ரான், கஞ்சிராம், கபிலு, சிப்பிதா, சுட்டகா, திர்கபத்ரா, கரட்ரூமா, முசிடி

பொதுப்பண்புகள் :

             * இந்தியாவில், பசுமைமாறா காடுகள், மேற்குமலைத் தொடர்ச்சி மலைச்சரிவுகள் ஆகிய பகுதிகளில் எட்டி மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. எட்டிமரம் நடுத்தர உயரமானது.

            * விதைகள் மூலம் புதிய கன்றுகள் முளைக்க 70 முதல் 120 நாட்கள் ஆகும்.

            * மரங்கள் காய்க்க 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.

            * கிளைகள் வளைந்தும் நெளிந்தும் இருக்கும். பட்டை வழுவழுப்பாக சாம்பல் நிறமாக இருக்கும். இலைகள் கூம்பு வடிவமாக, பளபளப்பான பசுமை நிறத்தில் இருக்கும்.

            * புனல் வடிவ பூக்கள், வெளிர் பச்சை நிறத்தில் சிறிய கொத்துக்களாய் காணப்படும்.

           * பழங்கள் ஆரஞ்சுமஞ்சள் நிறத்தில் இருக்கும்.

பயன்கள் :

            * எட்டி மரத்தின் பழங்கள் மருந்துகள் தயாரிக்க பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.

            * அந்த மருந்துகள் மூலம் வயிற்றுவலி, மலச்சிக்கல், வாந்தி, குடல் எரிச்சல், இதய எரிச்சல், இதர இதய நோய்கள், ரத்த ஒட்டம் தொடர்பான பிரச்சினைகள், கண் நோய்கள், மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, நரம்புத் தளர்ச்சி, சுவாசமண்டலம் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை குணமாக்கப்படுகின்றன.

            * எட்டிமரம் கடினமான மரம். அதனால் இந்த மரங்கள் மரச்சாமான்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

வளர்ப்பு முறைகள் :

             * எட்டி மரத்தை நாற்று மூலமாகவும், வேர் சிம்புகள் மூலமாகவும் நடவு செய்யலாம். விதை சேகரிக்க மரத்திலிருந்து நன்கு பழுத்த கனிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

            * ஒரு கிலோ எடையுள்ள கனிகளில் 600 முதல் 900 விதைகள் வரை இருக்கும்.

           * இந்த விதைகளை முளைக்க வைத்து நாற்றுகளை எடுத்து நடவு செய்யலாம்.

           * வேர் சிம்புகளைப் பெற, மழைக்காலத்தில் மரத்தைச் சுற்றியுள்ள வேர்களில் வெட்டுக்காயம் ஏற்படுத்தினால், அதிலிருந்து புதிதாகச் சிம்புகள் வரும்.

            * இந்தச் சிம்புகளைச் சிறிது வேர்ப்பகுதியுடன் எடுத்து நடலாம்.

நோய் தடுக்கும் முறைகள் :

                 * எட்டி மரத்திற்கு நோய் தாக்குதல் என்பது மிகக்குறைவு.

எட்டி மரம் பொதுப்பண்புகள் | பயன்கள் | வளர்ப்பு முறைகள் | நோய் தடுக்கும் முறைகள்

கருத்துகள் இல்லை