* மரத்தின் பெயர் : புன்னை மரம்
* தாவரவியல் பெயர் : கேலோபில்லம் அயனோபில்லம்
* ஆங்கில பெயர் : Tamanu Tree, Beautyleaf Tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : மணற்பாங்கான மண்ணில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : குளுசியேசி
* மற்ற பெயர்கள் : சுல்தான் சும்பா, சுராங்கி, சம்பா, நாகசம்பா, புன்னகா, பவ்னா, புன்னா, உமா, பீச் டவுரிகா, ரெட் பூன், சாட்டின் டவுரிகா
பொதுப்பண்புகள் :
* புன்னை மரம் தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய பங்காற்றிய மரம் எனக்கூட கூறலாம்.
* வெப்பம் மிகுந்த இடங்களில் சாதாரணமாக வளரக்கூடிய மரங்களில் புன்னை மரமும் ஒன்று எனலாம்.
* கடல் மட்டத்திற்கு மேல் 1200 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் புன்னை மரங்கள் நன்கு வளரும்.
பயன்கள் :
* புன்னை விதையிலிருந்து தமனு என்ற எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இது உணவிற்கு பயன்படுத்துவதில்லை. இருப்பினும் இந்த எண்ணெய் அதிக மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
* இந்த எண்ணெயின் மூலம் புற்றுநோயினால் ஏற்படும் பாதிப்பினை குறைக்கலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியினையும் இது வழங்குகிறது.
* மேலும் இயற்கையாகவே தோன்றும் நோய்களுக்கும், அதாவது இளமையிலேயே வயதான தோற்றம் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாக செயல்பட்டு அவற்றை குறைக்கிறது.
* மேலும் தமனு எண்ணெய் தோலில் ஏற்படும் ஏரிச்சல், சுருக்கங்கள், காயங்கள் மற்றும் புண்களினால் ஏற்படும் கடுமையான வலி, போன்றவற்றை எல்லாம் சரிசெய்யும் சக்தி உடையது.
* புன்னை மரம் பலவகைகளில் பயன்படுத்தப்படுகிறது. சிறுபடகு, கம்பங்கள், கொடிமரங்கள், கட்டுமானச் சாமான்கள், படிகள் அமைத்தல், மேஜை நாற்காலி செய்தல், வண்டிகளின் அச்சு, குவளை, பீப்பாய் போன்ற மரப் பரத்திரங்கள் செய்ய புன்னை மரம் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
* மேலும் வயல்களில் வேலி அமைக்க, காற்றுத் தடுப்பனாக, புன்னை மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
* இந்த மரத்தின் வேர் மூலம் செய்யப்படும் கஷாயத்தை கொண்டு, குடற்புண், கட்டிகள், கண்நோய் போன்றவற்றை குணப்படுத்தலாம்.
* இந்த மரத்தின் பால் மூட்டுவலி மற்றும் சொரியாசிஸ் போன்ற நோய்களை குணப்படுத்த வல்லது.
வளர்ப்பு முறைகள் :
* புன்னை மரத்தை நடவு செய்ய ஏப்ரல்-ஜுன் மாதம் ஏற்றது. ஏனெனில் இந்த மாதத்தில் விதைகளை சேகரித்து வைக்க வேண்டும். பின்னர் உடனடியாக விதைக்க வேண்டும். இல்லையென்றால் முளைக்கும் திறன் பாதிக்கும்.
* விதையை நேரடியாகவோ, நாற்று தயாரித்தும் நடவு செய்யலாம். விதைப்பதற்கு முன் விதையை ஒருநாள் முழுவதும் நீரில் ஊற வைத்து விதைப்பது சிறந்ததாகும்.
* நாற்று நடவு முறையில் 2-3 மாத வயது நாற்றுகளை 6x6 மீட்டர் இடைவெளியில் நடவு செய்து, அடர்ந்து வளர்ந்த பின் கலைத்து விட வேண்டும். இதனால் வளர்ச்சி துரிதமாக இருக்கும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* புன்னை மரத்திற்கு நோய் தாக்குதல் என்பது மிகக்குறைவு.
கருத்துகள் இல்லை