* மரத்தின் பெயர் : பெருங்காரை மரம்
* தாவரவியல் பெயர் : ராண்டி யுலினோனா
* ஆங்கில பெயர் : Divine Jasmine Tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : சதுப்பு நில மண்ணில் வளரும் மரம்
* தாவர குடும்பம் : ரூபியேசி
* மற்ற பெயர்கள் : வாகாட்டா, காலிகாரை
பொதுப்பண்புகள் :
* பெருங்காரை மரம் விதை, நாற்று, வேர்க்குச்சிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
* இந்த மரம் ஒரு வகை இலை உதிர் மரம் எனலாம்.
* இந்த மரத்தின் இலைகள் செழிப்பாகவும், பூக்கள் வெண்ணிறமாகவும் உள்ளதால் வீட்டின் முகப்பிற்கும், தோட்டத்திற்கும், சாலை ஓரங்களுக்கும், சுற்றுப்புறசூழலுக்கும் அழகேற்ற அலங்கார மரமாக திகழ்கிறது.
* இது தேனீக்களுக்கு தேவைப்படும் தேனை அதிக அளவில் கொடுக்கும் வெண்ணிறப் பூக்களை கொண்டுள்ளது.
* உயரம் : 6 - 8 மீட்டர்.
பயன்கள் :
* பெருங்காரை மரமானது பலவகையான பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
* பெருங்காரை மரத்தின் தழைகள் விளை நிலங்களுக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் கால்நடைகளுக்கு தீவனமாகவும், சமைத்து உண்ணும் வகையிலும் பயன்படுகிறது.
* இந்த மரத்தின் பூக்கள் அதிக நறுமணத்துடன் இருப்பதால் வாசனை தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
* மேலும் இம்மரத்தின் மூலம் வேளாண் கருவிகள், கம்பங்கள், முட்டுச்சாமான்கள், பந்தல்கால்கள் மற்றும் தூண்கள் செய்யப் பயன்படுகின்றன.
* மரச்சாமான்கள் செய்ய, காகிதம் தயாரிக்க இதன் மரக்கூழும், விறகிற்காக இதன் கிளைகள் பயன்படுகின்றன.
* பெருங்காரை மரம் வீசும் காற்றின் வேகத்தை குறைத்து, அவற்றில் உள்ள தூசியினை வடிகட்டி காற்றை தூய்மைப்படுத்துகிறது.
வளர்ப்பு முறைகள் :
* பெருங்காரை விதையை நேரடியாகவும், வேர்ச்செடிகளின் மூலமாகவும் நடவு செய்யலாம்.
* வேலிக்காக 2 மீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம்.
* பிறகு உயர்ந்து வளராமல் வெட்டி விடலாம் அல்லது 1 மீட்டர் இடைவெளியில் நடவு செய்து உயரமாக வளரவிடலாம்.
நோய் தடுக்கும் முறைகள் :
* இதில் நோய் தாக்குதல் குறைவு.
* இலைப்புள்ளி நோய் மரக்கன்று வளரும் ஆரம்பகாலத்தில் மட்டும் காணப்படும்.
* கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை