* மரத்தின் பெயர் : சந்தனமரம்
* தாவரவியல் பெயர் : சாந்தலம் ஆல்பம்
* ஆங்கில பெயர் : Sandalwood tree
* தாயகம் : இந்தியா
* மண் வகை : வளமான மண்ணில் வளரும் மரங்கள்
பொதுப்பண்புகள் :
* இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா ஆகும்.
* இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது.
* இது சுமாரான உயரத்திற்கு வளரும் இயல்பை கொண்டது. சந்தனத்தின் வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது ஆகும்.
* மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது.
* இதிலிருந்து எடுக்கப்படும் அகர் என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவையும், சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவையும் ஆகும்.
* மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும்.
* சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும்.
* மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது. மரம் வளர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பழங்களை தருகிறது.
* வெள்ளை சந்தன மரம் மரபணு சோதனை மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்படக் கூடிய சாதாரண சந்தன மரங்களுள் சிறப்பு வாய்ந்த ஒன்று.
* பல லட்சம் மரங்களுக்கிடையில் ஒன்று அல்லது இரண்டு மரங்கள் மட்டுமே வளரும். இம்மரத்தில் செய்யப்படக்கூடிய முருகன், சிவன், வேல் முதலான சிலைகள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன.
பயன்கள் :
* சந்தனம் என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும்.
* சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும்.
* இதிலிருந்து எடுக்கப்படும் அகர் என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவையும், சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவையும் ஆகும்.
* உடல், மன ஆரோக்கியத்திற்கான பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் சந்தனத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
* கூந்தல் தைலங்கள், சோப்புகள், நறுமணப் பொருட்கள் என எல்லாவற்றிலும் சந்தனத்தின் தேவை இன்றியமையாதது.
வளர்ப்பு முறைகள் :
* பெரும்பாலும் சந்தன மரம் நடப்படுகிறது அல்லது விதைக்கப்படுகிறது. சில வேளைகளில் முளைக்காமல் போய்விடுகின்றன.
* சந்தன மரத்தின் ஒட்டுண்ணிகள் இதற்கு முக்கிய காரணமாகும். மேலும் பகுதி நிழல்படுமாறு இருந்தால் நன்றாக வளரும். மேலும் இளஞ்செடிகள் மற்றும் இளம்மரங்களின் மேம்பட்டை உரிந்து விடாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் மரம் காய்ந்து போய்விடும்.
* பாத்திகளில் விதைத்து மூன்று மாதங்களுக்குப் பின் இடமாற்றம் செய்ய வேண்டும்.
* நாற்றுகள் 10-12.5 செ.மீ உயரமும் ஆணிவேர் 15 செ.மீ. முதல் 20 செ.மீட்டர் நீளம் உள்ள நாற்றுகளை ஒராண்டிற்குப் பின் நடவுக்குப் பயன்படுத்தலாம்.
* பாதுகாத்து வைப்பதில் இளம் அடிப்பாக நாற்றுக்களை விட சற்று வயது முதிர்ந்த மரங்களின் அடிப்பாக நாற்றுகள் சிறப்பானவை.
* வேர்களைத் துண்டுகளாக்கியும் நடவிற்குப் பயன்படுத்தலாம்.
* வேர்மூலம் செடிகள் நன்றாக வளரக்கூடியவை.
நோய் தடுக்கும் முறைகள் :
* சில வகை நோய் கடத்தும் பூச்சிகள் மிகுந்த பாதகமான முடிச்சு நோய்களை உண்டுபண்ணுகின்றன.
* இலை முடிச்சு நோய் பைட்டோபிளாஸ்மா நுண்ணுயிர்களால் ஏற்படுகிறது. இதனால் இலைகள் சுருண்டு விடுவதால் ஒளிச்சேர்க்கை பாதிப்படைகிறது. நோய்க்கடத்திப் பூச்சிகளால் ஒரு மரத்திலிருந்து மற்றொன்றிற்கு நோய் கடத்தப்படுகிறது.
* இலை முடிச்சு நோயை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை கரைசலை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
கருத்துகள் இல்லை