தேவையான பொருட்கள்:
* கேழ்வரகு மாவு1 கப்
* பயத்தம் பருப்பு2 டேபிள் ஸ்பூன்
* உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப
* காய்ந்த மிளகாய்2
* கடுகுகால் டீஸ்பூன்
* கொத்தமல்லி இலை1 கைப்பிடி
செய்முறை :
கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து தண்ணீரை கொஞ்சமாகத் தெளித்து பிசற வேண்டும். இதை பெரிய கண் உடைய சல்லடையில் சலிக்க வேண்டும்.
இட்லி கொப்பரையில் நேரடியாக துணியைப் போட்டு 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். வெந்ததும் கைகளால் நன்றாக உதிர்த்து விடவேண்டும்.
பயத்தம் பருப்பை குழையாமல் வேக வைத்து வடித்து தனியே வைக்கவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து வேக வைத்த பருப்பு, கேழ்வரகு மாவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு எடுக்க வேண்டும். கொத்தமல்லி இலையை மேலே பரவலாகத் தூவி பரிமாற வேண்டும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : கீரை கடையல், பாசி பயிறு கடைசல், தக்காளி கடைசல்.
கருத்துகள் இல்லை