* மரத்தின் பெயர் : கடற்கொஞ்சி
* தாவரவியல் பெயர் : முர்ரேயா பானிகுலேட்டா
* ஆங்கில பெயர் : Chinese Box Tree, Andam Satin Wood Tree
* தாயகம் : ஆசியா, ஆஸ்திரேலியா
* மண் வகை : குன்றுப்பகுதியில் வளரும் மரங்கள்
* தாவர குடும்பம் : ரூடேசியே
பொதுப்பண்புகள் :
* கடற்கொஞ்சி ஒரு சிறிய மரம். இவை இரண்டு மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது ஆகும்.
* பூக்கள் ஒவ்வொன்றும் 2.5 செ.மீ நீளமுடையது. புனல் வடிவத்தில் காணப்படும்.
* இந்த மரத்தின் இலைகள் அடர்ந்த கரும் பச்சை நிறத்துடன் காணப்படும்.
* ஆண்டு முழுவதும் பூக்கும் மரங்களில் இதுவும் ஒன்று. இருப்பினும் மார்ச்-ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் அடர்த்தியான பூக்களை பூக்கும் தன்மையுடையது.
* கடற்கொஞ்சி கனிகள் 1.25 செ.மீ அளவுள்ள முட்டை வடிவமுடையவை.
பயன்கள் :
* இந்த மரத்தின் இலையானது நறுமணத் தைலம் தயாரிக்க பயன்படுகிறது.
* மேலும் இதன் இலை கால்நடைத் தீவனமாக பயன்படுகிறது.
* இந்த மரம் கடினமான மரம் என்பதால் சிற்பங்கள் செய்ய இதை பயன்படுத்தலாம்.
* மேலும் பல்வேறு கைக்கருவிகளையும் செய்யலாம்.
* கடற்கொஞ்சி இலையை உலர்த்தி பொடித்து, வெட்டு காயங்களுக்கு மருந்தாக பயன்படுத்தலாம்.
* இதன் இலை மற்றும் வேர்ப்பட்டை இருமல், வாதம் மற்றும் சித்த பிரமை போன்ற நோய்களுக்கு தீர்வு தரும்.
* இது ஒரு அழகு மரமாகவும் கருதப்படுகிறது.
வளர்ப்பு முறைகள் :
* கடற்கொஞ்சியை வளர்க்க விதை மற்றும் கிளைக்குச்சிகளை பயன்படுத்தலாம்.
* பொதுவாக குச்சிகளை வேர் பிடிக்க செய்து, நடவு செய்யும் முறையே பரவலாக உள்ளது.
* இதனை நடவு செய்ய 1.5x1.5 மீட்டர் அளவு இடம் ஏற்றதாக இருக்கும்.
நோய் தடுக்கும் முறைகள் :
* கடற்கொஞ்சி மரத்திற்கு நோய் தாக்குதல் அதிகம் ஏற்படாது.
கருத்துகள் இல்லை