* மாவட்டம் : கிருஷ்ணகிரி
* இடம் : பாப்பாரப்பட்டி
* முகவரி : பாப்பாரப்பட்டி, கிருஷ்ணகிரி
* தாலுகா : கிருஷ்ணகிரி
வரலாறு :
காந்தி சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்களையும் கவரும் இடமாக உள்ளது. 1993-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் எண்ணற்ற கலைச் சின்னங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வருகிறது. இந்த அரசு அருங்காட்சியகம் பாரம்பரியத்துடன் உறவையும், கலை மற்றும் கட்டிடக்கலைகள், கலாச்சாரம் மற்றும் தமிழக வரலாற்றையும் ஒருங்கே கொண்டிருக்கும் அமைவிடமாகும். இந்த அரசு அருங்காட்சியகம் பொழுதுபோக்கிற்கான இடமாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த கல்விக்கூடமாகவும் விளங்குகிறது.
ஆர்ப்பாட்டமான உலகமயமாக்கல் கொள்கையால் நாட்டின் தனித்தன்மையும், அடையாளமும் அழிந்து வரும் வேளையில் இந்த அருங்காட்சியகம் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது. இந்த மியூசியம் பல்வேறு பொருட்களை சேகரித்து, வகைப்படுத்தி, அவற்றைப் பற்றி முறையான ஆராய்ச்சிக்கு பயன்படுத்தச் செய்யும் இடமாக இருக்கிறது. இங்கு மானிடவியல், தாவரவியல், தொல்லியல், புவியியல், விலங்கியல், மற்றும் சிறுவர்களுக்கான ஓவியக்காட்சிக் கூடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.
கருத்துகள் இல்லை