* மாவட்டம் : கிருஷ்ணகிரி
* இடம் : ஓசூர்
முகவரி :
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகரின் மத்தியில் அழகிய ராமநாயக்கன் ஏரி அமைந்துள்ளது.
தாலுகா: ஓசூர்
வரலாறு :
அழகு தரும் ராமநாயக்கன் ஏரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகரின் மத்தியில் அமைந்துள்ளது.
156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியை பாகலூர் பாளையக்காரரான ராமநாயக்கனாரால் கட்டப்பட்டது. இவர் பெயராலேயே இந்த ஏரி அழைக்கப்படுகிறது.
ஏரியில் இருந்து பாசனத்துக்கு நீர் செல்லும் குமிழித் தூம்பு மதகு, அழகிய கல்மண்டபம் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது.
இந்த ஏரியின் வடக்குப் பகுதியில் எங்கும் காணமுடியாத அகழியுடன் கூடிய கோட்டை இருந்தது. ஆனால் தற்போது அகழி மட்டும் உள்ளது.
ஏரியின் மேற்குப் பகுதியில் சிறுவர் பூங்கா, ஏரியின் கரைகளில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பூங்காவை ஒட்டியவாறு உள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்வதால் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.
மனதிற்கு உற்சாகமூட்டும் வகையில் ஏரியின் நீர்த்தேக்கத்தில் படகுசவாரி செய்யலாம்.
ஏரியின் சிறப்புகள் :
* ஏரியின் அழகு...
* அழகிய கல்மண்டபம்...
* சிறுவர் பூங்கா...
* கரையோரங்களில் நடைபாதை...
* உற்சாகமூட்டும் படகுசவாரி...
* புத்துணர்ச்சி தரும் தியான மண்டபம்...
கருத்துகள் இல்லை