* மாவட்டம் : கோயம்புத்தூர்

              * இடம்    : சோமையனூர்

முகவரி  : 

              ஆனைகட்டி மெயின் ரோடு செம்பாபுரி, சோமையனூர், கோயம்புத்தூர்.

தாலுகா: கோவை வடக்கு

வரலாறு  : 

              மாங்கரையில் இருந்து உற்பத்தி ஆகும் செம்பாநதிக் கரையில் அமைந்துள்ள அருள்மிகு செம்பகாளியம்மனை வழிபட்டால் திருமண தடை உள்ளவர்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நடக்கும்.

தல வரலாறு :

              பரஞ்சேர் வழியில் ஆண் தெய்வத்திற்கு பதிலாக பெண் தெய்வத்தை குலதெய்வமாக நிலைநாட்டி உள்ளனர். அதன் அடிப்படையில் பாலவேளாளக்கவுண்டர் சமூகத்தில் இருக்கும் 18 குலங்களில் ஏனைய அனைத்து குலங்களிலும் பெண் தெய்வங்களே குலதெய்வமாக வழிபட்டனர். அதன் அடிப்டையில் செம்பகுல முன்னோர் செம்பாபுரியில் செம்பகாளியம்மனை நிலைநாட்டி குலதெய்வமாக வழிபட்டனர் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே பெண் தெய்வத்தை குலதெய்வமாக வழிபட்டால் குலம், குடும்பம் செழித்து விளங்கும் என்பது சான்றோர்களும், ஆன்றோர்களும், ஆன்மிகப்பெரியோர்களும், அடிகளார்களும் கூறிய வாக்கு. அதன் அடிப்படையில் ஒருங்கே அமையப்பெற்ற இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்திகளின் சாந்த சொரூபமான காளியம்மனை குலத்தின் பெயருடன் சேர்த்து செம்பகாளியம்மன் என்று பெயரிட்டு அம்மனை வழிபட்டனர்.

தல சிறப்பு :

              சொக்கசெம்பீஸ்வரர் சகஸ்கரலிங்கம் வடிவில் 1008 லிங்கங்களாக இருப்பது சிறப்பு வாய்ந்தது. இது ஆயிரத்து எட்டு சிவலிங்கங்களை வழிபடுவதற்கு நிகரானது என்று கருதப்படுகின்றது. கல்யாண சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். இங்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலாக சிவனை குலதெய்வமாக வழிபட்டோர் அம்மனை குலதெய்வமாக ஏற்று கரியகாளியம்மனுக்கு மிகப் பிரம்மாண்டமாக கோவில் அமைத்து வழிபடுகின்றனர்.

பிரார்த்தனை :

               திருமணம் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் செம்பகாளியம்மனை மனதார பிரார்த்தனை செய்தால் திருமண தடை நீங்கி திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.

அருள்மிகு செம்பகாளியம்மன் திருக்கோவில் சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை