* மாவட்டம் : கோயம்புத்தூர்
* இடம் : புளுவாம்பட்டி
* முகவரி : ஈஷா யோகா சென்டர் சாலை, புளுவாம்பட்டி, கோயம்புத்தூர் தெற்கு.
* தாலுகா : கோயம்புத்தூர் தெற்கு
வரலாறு :
யோகி ஜக்கி வாசுதேவ் மற்ற யோகிகளுடன் சேர்ந்து உருவாக்கியதே இந்தத் தியான லிங்கம். இதிலிருந்து உருவாகும் சக்திமிகு அதிர்வலைகள் யோகா பயிற்சியில்லாத மனிதர்களுக்கும் அந்தப் பேரனுபவத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. பேராசை, அச்சம், பகை எதுவுமற்ற புதிய மனவுலகை அறியும் உயர் மகிழ்ச்சியைத் தருவதாகக் கருதப்படுகிறது. தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள காந்தப்புலத்திலிருந்து எழுந்து வரும் சக்தி, வாழ்க்கைத் தளையிலிருந்து நம்மை விடுவிக்கும் என்று நம்பப்படுகிறது. நம்பியவர்கள் பேரருள் அடைகிறார்கள்.
கருத்துகள் இல்லை