* மாவட்டம் : திருப்பூர்
* இடம் : திருப்பூர்
* முகவரி : திருப்பூர், திருப்பூர்
* தாலுகா : திருப்பூர்
வரலாறு :
500 வருடமாக இருக்கும் நாகர் முன் இருக்கும் புற்றுக்கண் மண் எடுத்து திங்கள் கிழமைகளில் சிறப்பு பூஜை நடக்கிறது. இதில், கலந்து கொண்டு இந்த மண்ணை பெறுபவர்கள் உடலில் பூசிக் கொண்டால், அரிப்பு குணமாகிறது. இதற்காக, இதனை தவறாமல் பெற்று வருகின்றனர், சிலர். 14 ம் நூற்றாண்டுக்கு முன்பே புற்றுக்கண்ணை வணங்கி வந்ததாகவும், அதன் பின் வந்தனர்கள் சிலை வைத்து கோவில் கட்டியதாகவும், கோவிலை தொடர்ந்து நடத்த முடியாமல் சிரமப்பட்டதாகவும் இப்பகுதியினர் நம்புகின்றனர். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வழியோர தெய்வமாக கோவில் இருந்தது. கடந்த 2012ம் ஆண்டு, புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் விவசாயிகள் பலர் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர். ஒருவருடைய மாடு திடீரென காணமால் போய் விட்டது. அவர் காடு முழுவதும் தேடிக்கொண்டிருந்தார். மரத்தடி ஒன்றுக்கு சென்ற மாடு தன் பாலை, அங்கிருந்து மண்ணில் தானாக சுரந்து ஊற்றிக் கொண்டிருந்தது. ஓடி வந்த விவசாயி, அருகில் வந்த போது, மண் திடீரென புற்றுக்கண்ணாக மாறிவிட்டது. விழித்த விவசாயி, ஊருக்குள் சென்று நடந்ததை கூற, மற்றவர்கள் வந்து பார்த்து வியந்தனர். புற்றுக்கண் அருகில் கல் ஒன்றை வைத்து நாகராக வணங்க துவங்கினர். 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த புற்றுக்கண் இன்றும் கோவிலில் உள்ளது. விசேஷ தினங்களில் சிறப்பு பூஜை முதலில் நாகருக்கு நடத்தப்படுகிறது. புற்றுக்கண் அமைய பெற்ற இடம் முத்தையன் என்பவருக்கு சொந்தமானதாக இருந்ததால்,முத்தையன் கோவில் என்ற பெயர் பேச்சு வழக்கு வந்து விட்டது.
கருத்துகள் இல்லை