* மாவட்டம் : திருப்பூர்
* இடம் : அமராவதி
முகவரி :
உடுமலையிலிருந்து தெற்கே தேசிய நெடுஞ்சாலை 17இல் 25 கிமீ (15.53 மை) தொலைவில் உள்ளது.
தாலுகா : உடுமலைப்பேட்டை
வரலாறு :
அமராவதி அணை தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி நகரில் இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்காவில் அமைந்துள்ளது. உடுமலையிலிருந்து தெற்கே தேசிய நெடுஞ்சாலை 17இல் 25 கிமீ (15. 53 மை) தொலைவில் உள்ளது.
அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஆழமான அணையால் பரந்த நீர்த்தேக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு தென்னிந்தியாவின் இயற்கைச்சூழலில் வளர்க்கப்படும் மிகப்பெரும் முதலைப் பண்ணை உள்ளது. பல்வகை மீன் இனங்களும் இயற்கையாக வளர பாதுகாப்புக் கொடுக்கப்படுகிறது.
இந்த அணை வேளாண்மைக்காகவும், வெள்ளக்கட்டுப்பாட்டிற்காகவும் முதன்மையாகக் கட்டப்பட்டது.
கருத்துகள் இல்லை