* மாவட்டம் : திருப்பூர்
* இடம் : முத்தனம் பாளையம்
* முகவரி : முத்தனம் பாளையம், திருப்பூர்
* தாலுகா : திருப்பூர்
வரலாறு :
கோயில் அமைந்துள்ள இடத்தில் சுமார் 800 வருடங்களுக்கு முன் புதர்கள் மண்டிக்கிடந்த காடாக இருந்தது. இந்த காட்டிற்கு அருகிலிருந்த கிராமத்தார்களின் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு வரும். அவ்வாறு மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகளில், அருகிலிருக்கும் மணியம்பாளையத்தை சேர்ந்த பசு ஒன்று, புற்று வடிவில் சுயம்புவாக எழுந்திருக்கும் கருநாகரூபிணிக்கு தானாக பால் சுரந்து கொடுத்து விட்டு வந்து விடும்.
இதனால் தான் ஈன்ற கன்றுக்கு கூட பால் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பசுவின் சொந்தக்காரர் மாடு மேய்ப்பவனை கண்டிக்கிறார். அத்துடன் பசுவையும் கண்காணிக்கிறார். அப்போது பசுவானது சுயம்புவுக்கு தானாக பால் சுரப்பதை நேரில் கண்டார். அதே போல் அன்று இரவே வேறு ஒரு பக்தரின் கனவில் அங்காளம்மன் தோன்றி, ""எனது பக்தர்கள் இங்கிருந்து மேல்மலையனூர் வந்து என்னை தரிசிக்க நீண்ட தூரம் பயணம் செய்து, பல சிரமங்களை சந்திக்கிறார்கள். எனவே கொங்கு மண்டலமான இப்பகுதியில் பசு பால் சுரந்த இடத்தில் சுயம்புவாக புற்று வடிவில் எழுந்தருளியுள்ளேன், '' என கூறினாள்.
நடந்த இச்சம்பவங்களுக்காக புற்று எழுந்தருளியிருக்கும் பெருமனை மாடகுல கவுண்டர்களுக்கு சொந்தமான பூமியை, மணியம்பாளையம் ஓதாள குலக்கவுண்டர்கள் வாங்கி அவ்விடத்தில் சுயம்புவுடன் உள்ள அங்காளம்மனுக்கு கோயில் கட்டி வழிபட்டார்கள். ஏராளமான குலத்தை சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு அங்காள பரமேஸ்வரி குலதெய்வமாக விளங்கி காத்து வருகிறாள்.
கருத்துகள் இல்லை