* மாவட்டம் : திருநெல்வேலி

               * இடம்    : தோரணமலை

முகவரி  : 

              கடையம் , திருநெல்வேலி மாவட்டம் தென்காசியிலிருந்து கடையம் செல்லும் வழியில் இத்தலம் அமைந்துள்ளது.

தாலுகா    : அம்பாசமுத்திரம்

வரலாறு  : 

                 தோரண மலை முருகன் கோயில், தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம், தவம், தியானம் ஆகிய ஐம்பெரும் சிறப்புகளை உடையது. முருகப்பெருமானின் 16 வடிவங்களை பற்றி கூறும் கந்த புராணத்தில் முதன்மையான ஞானசக்தி வடிவமாக கையில் வேலுடன் மயில் வாகனத்தில் தோரண மலையில் எழுந்தருளி உள்ளான் கந்தன்.

தோரண மலையில் தங்கிய அகத்தியர் :

                அகத்தியரின் மருத்துவ திறனை பயன்படுத்தி தேரையரின் சமயோசித புத்தியை வெளிப்படுத்தி சித்த மருத்துவத்தின் சிறப்பை உலகறிய செய்ய முருகப்பெருமான் திருவிளையாடல் நடத்திய தலம் இது.

               அகத்தியர் திருக்குற்றாலம் வந்தபோது அங்கு வைணவத்தலத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளிய பெருமாளை இலஞ்சி குமாரசாமியின் அருளால் சிவபெருமானாக்கி வழிபட்டு பொதிகை மலை நோக்கி வந்தார். வரும் வழியில் உயர்ந்து நிற்கும் தோரண மலையின் அழகில் மனம் மகிழ்ந்தார்.

               சிறிது காலம் இம்மலையில் தங்கி தவம் புரியவும், சித்த மருத்துவம் ஆராய்ச்சி செய்யவும் விரும்பினார். அப்பொழுது தன் இஷ்ட தெய்வமான முருகப்பெருமானை மலைமீது தவமிருந்து வணங்கி வந்தார்.

               மருத்துவ ஆராய்ச்சியில் அவருக்கு உதவியாக அவ்வையாரின் பரிந்துரையின் பேரில் பிறவி ஊமையான ராமதேவன் எனும் அந்தணன் சீடனாக இருந்து வந்தார். மருத்துவ ஆராய்ச்சியில் தனக்கு உதவியாகவும், சிகிச்சையில் சமயோசிதமாகவும் செயல்பட்ட தன் சீடன் ராமதேவனை பாராட்டிய அகத்தியர் அவரை தேரையர் என்று அழைக்க தொடங்கினார்.

குகையில் முருகன் தரிசனம் :

               தோரண மலை குகையில் முருகப்பெருமான் தரிசனம் தருகிறார். இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.

தோரண மலை சிறப்பு :

                வாரணமலை என்பது காலப்போக்கில் தோரண மலை என மருவி வழங்கப்படுகிறது. வாரணம் என்பதற்கு யானை என்று பொருள். யானை முன்னங்கால்களை மடக்கி படுத்திருப்பது போன்று அமைந்துள்ளது. 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து காண்போருக்கும் தரிசனம் தரும் வகையில் தோரண மலை அமைந்துள்ளது.

                மிகப்பழமையான இந்த தோரண மலையில் தற்போது உள்ள முருகன் சிலையை சுனையில் இருந்து மீட்டெடுத்து சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளான் மதுரையை ஆண்ட வெங்கலநாயக்கன் என்னும் மன்னன். சீதையை தேடிவந்த போது ராமபிரான் தோரண மலை வந்து முருகனை வழிபட்டதாக ஐதீகம்.

               அடிவாரத்தில் இருந்து சுமார் 926 படிகட்டுகள் கடந்து சென்றால் மலை உச்சியில் உள்ள முருகனை தரிசிக்கலாம். மலைப்பாதையின் நடுவில் சுயம்பு லிங்கத்தையும் தரிசிக்கலாம்.

                வேறெங்கும் காண இயலாத 65 விதமான வற்றாத சுனை ஊற்றுகள் தோரண மலையில் உள்ளன. இதில் முக்கியமான சுனை ஊற்று முருகன் கோயில் அருகில் உள்ளது. மூலிகை குணம் நிறைந்த, இச்சுனை ஊற்று நீரை பருகி வர நோய்கள் குணமாகும் என்கிறார்கள்.

               சித்தர்கள் தவம் புரிந்த இடங்களில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்கின்றனர். சுவாமி தரிசனத்துடன், தியானமும் நடப்பது தோரமணமலையில் மட்டுமே.

பலன் தரும் வழிபாடுகள் :

                தோரண மலையில் ஒரு நாழிகை நேரம் தியானம் செய்து முருகப்பெருமானை வழிபட்டால் உலகையே வெல்லும் ஞானம் கிடைக்கிறது. எப்படிப்பட்ட நோயும் தானாகவே குணமடைகிறது.

அருள்மிகு தோரணமலை முருகன் திருக்கோவில் சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை