* மாவட்டம் : திருநெல்வேலி
* இடம் : பணகுடி
* முகவரி : பணகுடி, திருநெல்வேலி.
* தாலுகா : ராதாபுரம்
வரலாறு :
குத்தரபாஞ்சான் அருவி, திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அருவியாகும்.
இந்த அருவியில் தண்ணீர், பல அடி உயரத்திலிருந்து செங்குத்தாக பாய்வதால் குத்தரபாஞ்சான் அருவி என அழைக்கப்படுகிறது.
இதுவரை மாசுபடாமல் உள்ள அருவி என்பதும், அருவியில் கொட்டும் மருத்துவ குணமுள்ள நீரும் தான் இதன் சிறப்பு.
சின்ன குற்றாலமாக காட்சியளித்து வரும் இந்த அருவியில் குளித்து மகிழலாம்.
இந்த அருவிக்கு பணகுடியிலிருந்து கரடுமுரடான மலைப்பாதை வழியாகதான் செல்ல வேண்டும்.
இந்த அருவியின் தொடர்ச்சி அனுமன் நதியாக ஓடுகிறது.
இந்த அருவியில் இருந்து சற்று தொலைவில் கன்னிமாராதோப்பு பகுதியில் மலையிலிருந்து வருகின்ற அழகான ஓடையில் குளித்துவிட்டு, சப்தகன்னிமார் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செல்லலாம்.
சிறப்புகள் :
* ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...
* ஓடையின் அழகு...
* மகிழ்ச்சியான குளியல்...
* கரடுமுரடான மலைப்பாதை...
* சப்தகன்னிமார் கோவில்...
போக்குவரத்து :
குத்தரபாஞ்சான் அருவி, திருநெல்வேலி மாவட்டம் பணகுடியிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
கருத்துகள் இல்லை