* மாவட்டம் : திருநெல்வேலி

                * இடம்    : செங்கோட்டை

முகவரி  : 

               செங்கோட்டை, குற்றாலத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் செங்கோட்டைக்கு அருகில் உள்ளது.

தாலுகா: செங்கோட்டை

வரலாறு  : 

                குண்டாறு அணைக்கு மேலும் சிறப்பூட்டக் கூடியது குண்டாறு அருவி. உள்ளூர் மக்களால் நெய்யருவி என அழைக்கப்படும் இது குண்டாற்று நீர்த்தேக்கத்தின் அருகே அமைந்துள்ளது.

                பெரும்பாலும் யாரும் அறியாதவாறு உள்ள இந்த அருவிக்கு, குற்றாலம் வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு சிலர் வந்து செல்வது வழக்கம். பாதுகாப்பாக அருவியில் குளிக்க விரும்புவோருக்கு இது ஏற்றதாகும்.

                நெய்யருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள் குண்டாறு அணையில் படகு சவாரி செய்தும் மகிழலாம். அணைப்பகுதியில் சிறிய பூங்கா ஒன்றில் சிறுவர்களை மகிழ்விக்கும் சில விளையாட்டு சாதனங்களும் உள்ளது.

               குண்டாறு அருவி, நெய்யருவி என அழைக்கப்பட்டு வந்த இது தற்போது தல தோணி அருவி என்று அழைக்கக் காரணம் நம் கிரிக்கெட் ஜாம்பவான் தோணியே இதில் குளித்ததால் தான். கடந்த மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக திருநெல்வேலி வந்த எம்.எஸ்.தோணி இப்பகுதியின் முக்கிய சுற்றுலாத் தலமான குண்டாறு அருவியில் குளித்தும், குண்டாறு அணைக்குச் சென்றும் இயற்கையை ரசித்தார்.

குண்டாறு அருவி சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை