* மாவட்டம் : திருச்சிராப்பள்ளி

                * இடம்    : தொட்டியம்

முகவரி  : 

             திருநாராயணபுரம், திருச்சியில் இருந்து 52 கி.மீ. தூரத்திலுள்ள தொட்டியம் சென்று, அங்கிருந்து 5 கி.மீ. சென்றால் திருநாராயணபுரத்தை அடையலாம்.

தாலுகா: தொட்டியம்

வரலாறு  : 

              ஶ்ரீவேதநாராயண பெருமாள், ஶ்ரீவேதநாயகித் தாயார் உலகையே ரட்சித்து, ஞானம் வழங்கி அருளும் அற்புதமான இத்தலம் தொட்டியம் வட்டம், திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல வரலாறு :

               மகாபலிச் சக்கரவர்த்தி மைசூரை நோக்கிப் படையெடுத்துச் செல்லும் வழியில் மண்மேடாக இருந்த இடத்தில் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தார். அப்போது மன்னன் கனவில் தோன்றிய பெருமாள், இங்கே பூமிக்கு அடியில் இருக்கும் என்னை மேலே எழுந்தருளச் செய்து, கோவில் எழுப்பு 'உனக்கு ஜெயம் உண்டாகும்' என அருளினார். மன்னர், விடிந்ததும் பெருமாளின் திருவிக்கிரகத்தைப் பூமியில் இருந்து எடுத்து, பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து வழிபட்டுச் சென்றார்.

               வேதநாராயண பெருமாள் திருக்கோவிலுக்காக அங்கே ஒரு கிராமத்தை உருவாக்கி, அதற்குத் திருநாராயணபுரம் என்று பெயர் சூட்டி, கிராமத்தையும் நிலங்களையும் தானமாக அளித்துவிட்டுச் சென்ற பிறகு மைசூரை வென்றார்.

தல பெருமை :

               வேதநாராயண பெருமாள் திருக்கோவில், காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது. ஸ்ரீகம்பத்தடி அனுமன், ஸ்ரீகருடாழ்வார் ஆகியோரைத் தரிசித்தபடி உள்ளே சென்றால் ஸ்ரீவேதநாராயணரைத் தரிசிக்கலாம்.

               சிவனுக்கு உகந்த வில்வ மரத்தடியில் பெருமாளின் திருவடிகள் உள்ளது. அருகில் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.

              பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும், ஸ்ரீபூதேவியும் இருக்கிறார்கள். கீழே பிரகலாதன் மூன்று வயதுக் குழந்தை வடிவில் அழகாக காட்சித் தருகிறார்.

              பிரம்மன், பிரகலாதன், சுக்கிரீவன், கருடன், அனுமன், ஆரையர், சோழர் முதலியோர் வழிபட்டு பேறு பெற்ற தலம். இத்தலம் ஆதிரங்கம் அதாவது முதல் ரங்கம் என்று போற்றப்படுகிறது.

             புகழ்பெற்ற வைஷ்ணவ தலமான வேதநாராயண பெருமாள் தலத்தில் வைகாசி மாதம் தேரோட்டம் நடைபெறும். எம்பெருமாள் உபயநாச்சியாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை :

                 27 அகல் தீபமேற்றி, நம் ஜாதகத்தைப் பெருமாளின் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும்.

                ஐந்து நெய் விளக்கேற்றி, வெண்தாமரை மலரால் அர்ச்சித்து வழிபட கல்வி மேம்படும், தொழில் விருத்தியாகும், வியாபாரம் செழிக்கும் என்றும் பக்தர்களின் நம்பிக்கை.

அருள்மிகு வேதநாராயண பெருமாள் திருக்கோவில் சுற்றுலா தலம்

கருத்துகள் இல்லை